.

Pages

Wednesday, June 24, 2015

புதுத்தெரு மிஸ்கீன் சாஹிப் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் !

புதுத்தெரு மிஸ்கீன் சாஹிப் பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகமும், இஃப்தார் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் பொறுப்பாளர்கள் மூலம் தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ் தொழுகையும் நடைபெறுகிறது. இதில் அப்பகுதியினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
 
 
 
 
 

1 comment:

  1. நான் வாரம் ஒரு முறை வியாபார ரீதியாக கூத்தநல்லூர் செல்வது வழக்கம். ரமலான் தொடங்கி இருமுறை கூத்தநல்லூர் சென்றுவந்தேன். பள்ளி நிறுவாகம் நோன்பு திறக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரவில்லை. கடைசியில் நானும் எனது நண்பரும் 20 ருபாய் கொடுத்து கடையில் தண்ணீர் வாங்கி வந்து நோன்பு திறந்தோம். ஏன் இந்த அவலநிலை?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.