நாள் ஒன்றுக்கு 30 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள புதுமனைத்தெரு, நடுத்தெரு, நெசவுத்தெருவின் ஒரு பகுதியினர் உட்பட சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து வாங்கிச்செல்கின்றனர்.
இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், இரவில் தராவிஹ் தொழுகையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Kange veneyokam ok
ReplyDeletematra potdovel vadai /???????