பொதுமக்கள் வங்கிகளில் எத்தனை ரூபாய் நோட்டு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால், ஒருவரது கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி இவ்வாறு மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது. சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அழித்தது எவ்வளவு?
கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜனவரி வரையிலான 13 மாதங்களில் 2005க்கு முந்தைய 164 கோடி ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் பெறப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இதில் 1,000 நோட்டுக்களும் அடங்கும் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி 21,750 கோடி மதிப்புக்கு 2005க்கு முந்தைய நோட்டுக்கள் பெறப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதில், 86.87 கோடி 100 நோட்டுக்கள், 56.19 கோடி 500 நோட்டுக்கள், 21.75 கோடி 1,000 நோட்டுக்களும் அடங்கும்.
நன்றி:தினகரன்
நல்லதொரு திட்டம்; வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடம் இந்தியா பணம்மிருந்தால் அந்நாட்டு கரன்சிக்கு மாற்றி விடுங்கள், சிலர் தங்கள் இந்திய பணத்தை பேங்கில் உள்ள Safe Locker ல் வைத்திருப்பவர்களின் நிலைமை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே! அந்தப் பணம் அவ்வளவு தானா? தேர்தல் நேரத்தில் எவ்வளவு 500 ரூபாய் வெளிவரும் பாருங்கள் அவ்வளவு கருப்பு பணம், அதை கட்டுப்படுத்த வழி?
ReplyDelete