அடுத்து நோன்புகாலங்களில் மட்டுமே விளையாடக்கூடிய கிளித்தட்டு ஓர் அரற்புதமான ஆரோக்கியமான விளையாட்டு நன்றாக விளையாடிவிட்டு சஹர் உணவை ஒரு வெட்டு வெட்டலாம். மற்றும் அடுத்த நாள் லுஹர் வரை தூக்கத்திற்கும் கேரண்டி? இப்பொழுதெல்லாம் யாரும் விளையாடுவது இல்லை ( அதுவே சரியும் ஆகும் )
அடுத்து ஹிஜ்பு சிறியவர் முதல் பெரியவர்வரை வரிசையாய் அமர்ந்து சிறியவர்கள் திக்கித்திக்கி ஓதுவது அதை ஒஸ்தாத் எடுத்துக்கொடுப்பதும் நல்ல அனுபவம் இப்பொழுது எல்லாப்பள்ளிகளிலும் ஓதுவது இல்லை.
கடைசியாய், கதாநாயகி ! நோன்புக்கஞ்சி அற்புதமான மூலிகை கஞ்சி கமகம மனம் கலகல என வயிற்றை நிறைக்கும் மாற்று சமயத்தவரையும் கவர்ந்த கஞ்சி நோன்புக்கஞ்சி, அசருக்குப்பின் எல்லாப்பள்ளிகளிலும் கலகலப்பாய் நேரம் போனதே தெரியாமல் சந்தோஷ தருணங்களாகும் வசதியானவரோ, வசதியற்றவரோ அனைவரையும் வரிசையாய் நிற்க வைக்கும் நோன்புக்கஞ்சி இது மட்டும் இன்னுமும் நிலைத்திருக்கிறது எல்லா பள்ளிகளிலும். மாஷா அல்லாஹ் !
மு.செ.மு சபீர் அஹமது ( திருப்பூர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.