.

Pages

Monday, June 22, 2015

அதிரையில் பர பர விற்பனையில் ஹெல்மெட் !

தமிழகத்தில் ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிரை காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி அதிரையின் பிரதான பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரையின் முக்கிய பகுதியில் 'காவல்துறையின் அறிவிப்பும்' வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிரையில் ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய பல்வேறு டிசைன்களில் ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சிலநாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட்களை ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

இதுகுறித்து அதிரை அல் அமீன் பள்ளி அருகே உள்ள 'சன் ஆட்டோ மொபைல்ஸ்' நிறுவன உரிமையாளர் வாப்பு மரைக்காயர் நம்மிடம் கூறுகையில்...
'காவல்துறை அறிவிப்பை அடுத்து எங்கள் நிறுவனத்தில் ஐஎஸ்ஐ தரக்கட்டுப்பாடு பெற்ற ஹெல்மெட்களின் விற்பனையை துவங்கியுள்ளோம். தலைசிறந்த நிறுவனங்கள் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விலை மலிவாக விற்பனை செய்கிறோம். மேலும் எங்கள் நிறுவனம் சார்பில் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் விநியோகித்து வருகிறோம்' என்றார்.
தொடர்புக்கு :
வாப்பு மரைக்காயர் 0091 9944588689
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.