.

Pages

Sunday, June 21, 2015

மணிக்கு 140km வேகத்தில் கால்களால் வாகனத்தை ஓட்டிச்சென்ற சவூதி இளைஞர் !

சவூதி நாட்டைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கையில் செல்போன் பேசியபடி மணிக்கு 140km வேகத்தில் வாகனத்தை கால்களால் ஓட்டிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சவூதி நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் முகமது அல் உரைஃபி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
'நான் எனது காரில் பயணித்த போது உள்ளூர் இளைஞர் கையில் செல்போன் பேசியபடி மணிக்கு 140km வேகத்தில் வாகனத்தை தனது கால்களால் ஓட்டிச்சென்றார். இந்த காட்சியை எனது செல்போனால் படம் எடுத்துக்கொண்டேன். இந்த இளைஞருக்கு இறைவன் நேரான வழியே காட்டவேண்டும்' என கூறியிருக்கிறார்.

செய்தி தொகுப்பு: அதிரை நியூஸ்
Source: Emirates247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.