கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் செலுத்தி அரசு வழங்கும் மானிய விலை அரிசியை முதன் முதலாக அந்தந்த பள்ளி நிர்வாகிகளின் ஒப்புதலோடு 15 பள்ளிவாசல்களுக்கு பெறப்பட்டது. அதிரையில் தற்போது மொத்தம் 31 தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இதில் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு திறப்பதற்காக கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறை அதிரையின் மொத்தம் 25 பள்ளிவாசல்களுக்கு 40,350 கிலோ மானிய விலை அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக அரசிடமிருந்து மானிய விலை அரிசி பெற சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் ஒப்புதலோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக பிலால் நகர் பள்ளிவாசலின் முத்தவல்லி S.M.A. அஹமது கபீர் செய்து வருகிறார்.
இதுகுறித்து பிலால் நகர் பள்ளிவாசலின் முத்தவல்லி S.M.A. அஹமது கபீர் நம்மிடம் கூறும்போது...
புனித ரமலான் மாதத்தில் அரசு வழங்கி வரும் மானிய விலை பச்சரிசியை கிலோக்கு ரூபாய் 1/- வீதம் செலுத்தி பெறுகிறோம். இவற்றை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.மேலும் அரிசியை ஏற்றி வரும் வாகனத்திற்கு வாடகை கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அரசின் சார்பில் அந்தந்த பள்ளிவாசல்களுக்கு நேரடியாக இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
கஞ்சி காய்ச்சுவதற்கு பாமாயில், பருப்பு வகைகள், சீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும். அதே போல் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கூடுதலாக அரிசியை வழங்க வேண்டும். விடுபட்டுள்ள மீதமுள்ள பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என்றும், மேலும் காலதாமதத்தை தவிர்க்கும் விதத்தில் ரமலான் நோன்பு ஆரம்பிக்கும் ஒருவாரம் முன்பாக அரிசியை விநியோகிக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.