.

Pages

Sunday, June 21, 2015

புனித ரமலான் நோன்புக்கு உதவும் கூகுள்!

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் புனித ரமலான் மாத நோன்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில், 'கூகுள் ரமலான் கம்பேனியன்' ( https://ramadan.withgoogle.com/#/ ) எனும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

முஸ்லீம்களுக்கு ரமலான் மாதம் புனித மாதமாக அமைகிறது. இந்த மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லீம்கள் சரியான நேரத்தில் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த புனித மாதத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் கூகுள், ரமலான் தொடர்பான இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது. 'ரமலான் கம்பேனியன்' ( https://ramadan.withgoogle.com/#/ ) எனும் அந்த இணையதளத்தில், சரியான நேரத்தில் நோன்பை கடைப்பிடிக்க வசதியாக தினந்தோறும் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமனமாகும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய நேரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர இந்த புனித மாதத்திற்கான உணவுகளை செய்யும் முறைகள் மற்றும் பார்க்க கூடிய வீடியோக்கள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறது. இப்தார் விருந்துக்கு குறித்த நேரத்திற்கு செல்லும் வகையில் பயணத்தை திட்டமிட, போக்குவரத்து தகவல்களையும் அளிக்கிறது.

மேலும், கூகுள் நவ் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ஹலால் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் கூகுள் தனது ஆன்ராய்டு பிளே ஸ்டோரில் ரமலான் மாதம் தொடர்பான சிறப்பு செயலிகளை அடையாளம் காட்டும் 'வெல்கம்மிங் ரமலான் 2015' எனும் பகுதியையும் துவக்கியுள்ளது.

-சைபர்சிம்மன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.