நாள் ஒன்றுக்கு 30 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், பள்ளியின் மக்தபா ஹிதாயா வளாகத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளியில் நடைபெறும் தராவீஹ் தொழுகைக்கு பின் 'ஹிஜ்பு' நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளிக்கு கஞ்சி விநியோகிக்க விரும்புவோர் பள்ளி நிர்வாகியின் கீழ்கண்ட அழைப்பேசியில் தொடர்பு கொண்டு உதவலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பள்ளிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாக செலுத்தலாம்.
வங்கி விவரங்கள்:
A.J. JUMA MASJID
PANDIAN GRAMA BANK
ADIRAMPATTINAM BRANCH
A/C NO. 786786786
மாஷா அல்லாஹ் ....
ReplyDeleteஒரு வேண்டுகோள்
அதிரை மீடியாக்களில் இந்த பள்ளியை பற்றி செய்திகள் பதியும்போது AJ ஜும்மா பள்ளி என்று குறிப்பிடுவது தாள சிறந்தது .
சுட்டிக்காட்டிமைக்கு நன்றி !
Delete'ஜும்மா' என்ற வார்த்தை பதிவின் தலைப்பில் சேர்க்கப்பட்டது.