விழாவிற்கு பட்டுக்கோட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் முஹம்மது ஹனீபா, பள்ளி கல்வி குழு தலைவர் கவுன்சிலர் முஹம்மது செரீப், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் முஹம்மது மாலிக், வழக்கறிஞர் அப்துல் முனாப், முஹம்மது இப்ராஹீம், வட்டார வளமைய பயிற்றுனர் டேவிட் ஆரோக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஜமால் முகமது, ஜாகிர் ஹுசைன், நிருபர் சாகுல்ஹமீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் சிறப்புரை வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக பள்ளி பட்டதாரி ஆசிரியர் கவிக்குமார் வரவேற்புரை ஆற்ற, பள்ளி தலைமை ஆசிரியை ஆர். மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். விழா முடிவில் பள்ளி உதவி ஆசிரியை கே. கலாதேவி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டுவிழாற்கு இணையாக வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி அமைந்து இருந்ததாக பலர் கருத்து தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக வாய்க்கால் தெரு பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி !//
ReplyDeleteஇந்த வார்த்தையால் எந்த பெருமையும் இல்லை.
மெட்ரிக் பள்ளிக்கு இணையாக கல்வி வரட்டும்.அது தான் ஊரே பேசும் அளவிற்க்கு உயர்வு மிக்க வார்த்தையாக இருக்கும்.
எனக்கு அடித்தளமிட்ட பள்ளியின் வளர்ச்சி, அருமை
ReplyDelete