சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவும், ஜனநாயக கடமையாற்றிடவும், அனைவரும் உறுதியேற்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன். இ.ஆ.ப அவர்கள் தெரிவித்து இருந்தார்.
இதையொட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளை சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி இன்று 02-04-2016 சனிக்கிழமை காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை தாலுகா சப் ஆட்சியர் ராஜசேகர் இ.ஆ.ப அவர்கள் தலைமை ஏற்று வாக்காளர் விழிப்புணர்வு பிராசார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் குருமூர்த்தி ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார உரை நிகழ்த்தினார்கள். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் பிரசிடென்ட் மேஜர் முனைவர் கணபதி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளைத் தலைவர் மரைக்கா இத்ரீஸ் அஹமது, செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் அப்துல் ஹமீது மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் - தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.












முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு இனங்க செயல்பட்டு வருகிறார் அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அவர்கள் மேலும் சரியான நேரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மிக சிறப்பாக நடத்தி உள்ளார் அதிரையில் இந்த சமுக அமைப்பை அனைவரும் பேசும் படி செய்துள்ளார் மேலும் உறுப்பினர்களும் ஊர் பொது மக்களும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் இந்த விழிப்பணர்வு செய்தால் 100% வாக்குகள் பதிய வாய்ப்புகள் உள்ளது மேலும் அதிரை நீயுஸ்
ReplyDeleteநிஜாம் அதிரை சேர்மன் அஸ்லம் பாட்சா அவர்களுக்கும் ஊர் பொது மக்களுக்கும் நன்றி