.

Pages

Sunday, February 17, 2013

அதிரையில் இடிந்து விலும் நிலையில் மின்கம்பங்கள் !

மேலத்தெரு மகிழங்கோட்டை சாலையில் அமைந்துள்ள [ சண்முகம் டீ கடை அருகில் ] மின்கம்பம் அடிப்பகுதி மிகவும் அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும் நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் 10க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளது. 

அதே போல் நெசவுத்தெரு மாதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் அருகே அமைந்துள்ள [ டெய்லர் கடை எதிரில் ] மின்கம்பம் அடிப்பகுதி மிகவும் அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும் நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் 20க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளது. 

மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உயிரிழப்பு நிகழும் முன் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் அதிரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது எப்போது யார் தலையில் விழும் என்ற நிலையில் உள்ளது. விபரீதம் நடக்கும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


11 comments:

  1. அவசியம் அறியப்படுத்த வேண்டிய பதிவு.

    கவனத்தில் கொண்டு வந்து பதிந்தமைக்கு நன்றி.

    அதிரை மின்சார வாரியம் கவனத்திற்கு கொண்டு சென்று துரிதமாக இதை மாற்றிவிட்டால் பல விபரீத விபத்துக்கள் தடுக்கப்படும்.

    இதற்க்கு நமது மனித உரிமைக்காவலர் ஜமால் காக்கா மனம் வைத்தால் உடனே நடக்கும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    கோணலான பாதைகள் எல்லாம் நேராக்கப்படும் என்பது போல இந்த மின்கம்பங்கள் மட்டும் அல்லாமல் அதிரையில் உள்ள கோணலான மின்கம்பங்கள் அனைத்தும் வெகு விரையில் 90டிகிரிக்கு நேராக்கப்படும்.

    இது உறுதி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. ‘மனித உரிமைக்காவலர்’ KMA. ஜமால் முஹம்மது அவர்களுக்கு,
    இதுகுறித்து அதிரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது தொடர்பாக நேரடியாக கள ஆய்வு செய்து உங்களோடு நேரடி தொடர்பில் உள்ள மின்சார வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. மின்கம்பகள் எதாவது சரக்கு எதும் போட்டத இப்படி நிற்கின்ற்றது.சும்மா ஒரு கலாய்ப்புதான்.நமது மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவிடம் சொல்லுக இன்ஷா அல்லாஹு தீர்வு கிடைக்கும்.

    ReplyDelete
  5. அதிரையில் மின்சார கம்பிகள் மற்றும் டிரான்ஸ்பமார்களை ஏன் பூமியின் கீழ் கொண்டுவரகூடாது.?

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனையாவுள்ள ஈக்கீது

      Delete
    2. அதோடு மின் வாரிய அலுவலகத்தையும் அப்படியே கொண்டுவந்துவிடலாம்.

      Delete
  6. Thanks Nijaam for your effort

    Dear ஜமால் காக்கா, உங்களின் அவசரகால நடவடிக்கையை எதிர்ப்பார்த்து காத்துக்கிட்டிருக்கோம், நன்றி

    -- நெசவுத்தெருவாசி

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அப்துல்மாலிக் அவர்களுக்கு, ஏற்கனவே இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தாகிவிட்டது, இன்னும் சில தினங்களி்ல் சரிசெய்து விடுவார்கள். இது உறுதி.

      Delete
  7. இன்ஷா அல்லாஹ்.. மிக்க நன்றி காக்கா..

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் நாளை 21.02.2013 வியாழக்கிழமை நானும் அதிரை மின் வாரிய துணை பொறியாளர் திரு பிரகாஷ் அவர்களும் மேலும் சகோதரர் சேக்கன்னா எம் நிஜாம் அவர்களும் அந்த இடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வருவோம், எத்தனை மணிக்கு என்பதை சகோதரர் சேக்கன்னா எம் நிஜாம் அவர்களுக்கு அறிவிக்கப்படும். இது உறுதி.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.