.

Pages

Monday, February 18, 2013

அதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு !

நம்மூரில் எப்போதும் ஒரு மவுசு ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு உண்டு. லைப் ஸ்டைல் இமேஜ் எப்போதும் இருப்பதால் தொடர்ந்து அதை வாங்குகின்றனர் குடும்பத்தினரோடு செல்பவர்களோ, ஷாப்பிங் செல்லவோ இந்த பைக்கை வாங்குவோர் ரொம்ப கம்மிதான். வித்தியாசமான ரசனையுள்ளோரே இந்த பைக்கை விரும்புவார்கள். 
புதிய மாடலாக வந்துள்ள புல்லட்டில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பிரமாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜெக்டர் லைட்டுடன் புதிய ஹெட்லைட் முன்பக்கத்தை அழகாக்கிறது. இரட்டை குடுவை டயல்கள். ஒன்று டிஜிட்டல், மற்றொன்று அனலாக். டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பது போன்று வார்னிங் லைட் சுவிட்ச் உள்ளது. இந்த ஸ்விட்சை தட்டினால் காரில் உள்ளதுபோல் ஒரே நேரத்தில் நான்கு இன்டிகேட்டர் லைட்டுகளும் அணைந்து, அணைந்து எரியும். 
உயரமானவர்கள் மட்டுமின்றி உயரம் குறைவானவர்களும் ஓட்டும் வகையில் புதிய தண்டர்பேர்டு இருக்கை உயரமும் குறைக்கப்பட்டுள்ளது. எடை 195 கிலோ. சிசி 499. இன்ஜன் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிலேட்டரை முறுக்கினாலே வேகம் பிய்த்து கொண்டு போகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்துக்கு செல்லலாம். இரண்டு வீல்களிலும டிஸ்க் பிரேக் உள்ளது. வீல் பேஸ் 20 மி.மீ. பழைய பைக்கிலிருந்து குறைக்கப்பட்டு இருப்பதால் வளைவுகளில் எளிதாக ஓட்ட முடியும். லிடடருக்கு 30 கி.மீ. மைலேஜ் தரும் என்கிறார்கள் என்பீல்டு பிரியர்கள். இதன் விலை ரூ. 1.40 லட்சத்தை தொடும்.

5 comments:

  1. அஜ்மல் காக்கா அவர்களின் ஸ்னெப் ஸ்டில் முன்னாடி ராயல் என்பில்டு வெறும் ஜுஜுபி தான் .

    ReplyDelete
  2. ராயல் பீல்டா . நல்லாத்தான் கீது... ஆனால் நமக்கு எப்பவுமே பெஸ்ட் T V S தானுங்க.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இந்த புதிய மாடலில் பிரேக் இடம் வலம் மாற்றம்தான் ஒரு குறை, மற்றபடி எல்லாம் ஓகே.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. நல்லாத்தான் இருக்கு ஆனால் இதன் விலைக்கு நானோ கார் ஓன்று வாங்கி மீதி பணத்துக்கு டி வி ஸ் வாங்கிவிடலாம் போலிருக்கு.மச்சான் அஜ்மல் நீ கலக்குடா.

    ReplyDelete
  5. நல்லாத்தான் இருக்கு ஆனால் இதன் விலைக்கு நானோ கார் ஓன்று வாங்கி மீதி பணத்துக்கு டி வி ஸ் வாங்கிவிடலாம் போலிருக்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.