.

Pages

Saturday, February 16, 2013

அதிரையில் உப்பு உற்பத்தி பாதிப்பு !

வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென் தமிழகம் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் அதிரையில் திடீரென ஒரு மணி நேரம் உப்பள பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அதிரை, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. டிசம்பரில் இருந்து உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகள் துவங்கி நடந்து வந்தது. கடந்த 13ம் தேதி பொன் உப்பு வாருதல் துவங்கியது.

தொடர்ந்து 5 நாட்கள் வெயில் அடித்தால் மீண்டும் உப்பு உற்பத்தி துவங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

5 comments:

  1. மழைக்காலகளில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்ப்படும்.

    ReplyDelete
  2. பருவ மழை பொய்த்துப்போய் இத்தகைய தருணத்தில் திடீர் மழை பொழிவதினால் பல தரப்பட்ட தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    அதில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பாதிப்படையும்.

    வருத்தத்திற்குரிய செய்தி.! என்றாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இருத்தல் இத்தருணத்தில் அவசியம்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உப்பளங்கள் மழையால் மிகவும் பாதிக்க பட்டுள்ளது இந்த புகை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.இது குறித்து கூட தினகரன் சென்னை பதிப்பில் இன்று காலையில் பார்த்தேன். உணவுக்கு உப்பும் மிக முக்கியம் தானே

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    உப்பு உற்பத்தி பாதிப்பு, மழைக்கால மழை பாதிப்பு, ஒழுங்கான மின்உற்பத்தி பாதிப்பு, மானிடனின் எல்லா செயல் முறைகளும் பாதிப்பு.

    காரணம், காலம் பதி்ல் சொல்லுமா?
    இய்ற்கையோடு இந்த உலகம் போராடும்போது காலம் எப்படி பதில் சொல்லும்?

    காலம் இந்த உலகத்தின் முடிவையும் பதிலையும் எதிர்நோக்கியுள்ளது.

    எல்லாம் மாறவேண்டிய நேரத்தில் நிச்சயமாக மாறியே ஆகவேண்டும்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.