.

Pages

Monday, October 7, 2013

அதிரை பெரிய மார்க்கெட்டில் இறால் வரத்து அதிகரிப்பு !

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடல்களில் அதிகமான இறால்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக வெள்ளை நிறத்தில் காணப்படும் இறால்கள் 100 முதல் 150 கிராம் வரை எடையளவு கொண்டது. இவை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

அதிரையின் பிரதான மீன் மார்க்கெட் தக்வா பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள மீன் மார்க்கெட் ஆகும். இங்கு கடந்த சில நாட்களாகவே ஏலத்திற்கு வரும் இவ்வகை இறால்களை வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிச்செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் உள்ளூர் விலை சற்று இறங்கி காணப்படுவது உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



2 comments:

  1. இறாலைப் பாத்தாலே திங்கணும் போல ஆசையா ஈக்கிது சூப்பர் வெள்ளை ரால். வெலை எவ்வளவாம். சல்லிசா இருந்தா வூட்டுல சொல்லி வாங்கி அனுப்பிவைக்கச் சொல்லலாம்.

    ReplyDelete
  2. நல்லா பெருசாத்தான் ஈக்கிது நிறைய வெங்காயம் போட்டு பெரட்டினால் அருமையாகத்தான் ஈக்கும்.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.