.

Pages

Tuesday, October 22, 2013

புதியதோர் உதயம் 'ரேடியோ தாஃவா' ! இணைய ஒலிப்பரப்பு சேவை !

இன்றைய நவீன உலகில் விரிவடைந்து காணப்படும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு இதன் சேவை மனித வாழ்விற்கு பயன்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணையத்தை பயன்படுத்தி ஓரிடத்தில் பேசக்கூடிய ஒன்றை உலகளவில் ஒலிபரப்பச்செய்யும் [ வானொலியும் ] வசதியும் ஒன்று.

உலகெங்கும் வாழும் நம் சமுதாய மக்கள் இஸ்லாத்தினை அதன் தூய வடிவில் அறிந்திடவும், அவற்றை சிந்தித்து செயல்படுத்தவும், மனித சமூகத்திற்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை நெறிமுறைகளை நேரான பாதையில் வழிவகுத்துக்கொள்வதற்காக வேண்டியும் பல்வேறு இடங்களில் நடைபெறும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சிறந்த சொற்பொழிவுகளை திரட்டி அவற்றை இணையத்தின் மூலம் ஒலிப்பரப்பி அனைவரிடத்திலும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ரேடியோ தாஃவா என்ற இணையதள ஒலிபரப்பு சேவை.

இதற்காக சில தன்னார்வலர்களின் கடின முயற்சியின் கீழ் நிர்வாக கட்டமைப்பு முறையாக உருவாக்கி அவற்றை நடைமுறையில் கொண்டுவர உள்ளோம். இந்த 'ரேடியோ தாஃவா' இணையத்தின் மூலம் உலகளவில் வாழும் சமுதாய மக்கள் இவற்றை கேட்கலாம். மேலும் மொபைல் மூலமும் ஒலிப்பரப்பை கேட்டு பயனடையும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒலிப்பரப்பக்கூடிய நிகழ்ச்சிகள் :
1. திருமறையின் [ குர் ஆன் ] விளக்கங்கள்
2. நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களின் வாழ்க்கை வரலாறுகள்
3. அனைத்து நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகள்
4. சஹாபாக்களின் வாழ்கை வரலாறுகள்
5. இஸ்லாமிய சட்ட திட்டங்கள்
6. இஸ்லாம் கூறும் வாழ்வியல் வழிகாட்டு நெறிமுறைகள்

ஆகியவற்றை பிரதானமாக கொண்டு 24 மணி நேரமும் ஒலிப்பரப்பும் சேவையை வழங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் சிறந்த மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளை இதில் ஒலிப்பரப்ப கேட்டுக்கொள்ளும் சகோதரர்கள் கீழ்கண்ட எங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம். குழுவினரின் பரிசீலனைக்கு பிறகு ஒலிபரப்பப்படும்.

நிர்வாகம்,
ரேடியோ தாஃவா
சென்னை
மின்னனஞ்சல் : info@radiodawah.org
இணையதளம் : http://www.radiodawah.org/

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. Arumai....arumai n'alla muyarche vaalka

    ReplyDelete
  3. நல்லதோர் முயற்ச்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.