மானுடர்க்கு
எத்தி வைக்க வந்தவரை
தலைவராய் ஏற்றவர்
இஸ்லாமியர்கள்
அவரை முஹம்மது [ ஸல் ]
கதாநாயகனாய் கொண்டு
படமெடுப்போர்
சினிமாக்காரர்கள்
கதாநாயகன் இல்லாது
[ காட்டாது ]
ஒரு படமென்றால்
அது மெசேஜ் மாத்திரமே
கதாநாயனை காட்டாததின்
காரணம்
இஸ்லாமியர்கள்
காட்டு காட்டி விடுவார்களே
அபூபக்கரும், உமரும்
அலியும்
இங்கே பீட்டரும், காட்டரும்
ஆல்பர்ட்டுமே
பள்ளியில் உமரைப்பற்றி [ ரலி ]
பயான் செய்ய
நம் மன கண்முன்னே
காட்டர்தான் வந்து நிற்பார்
வீர பாண்டியரை [ கட்டபொம்மன் ]
பற்றி பேசினால்
சிவாஜி தெரிவதுபோல் !
முள்ளை முள்ளால்தான்
எடுக்கவேணும்
என்பவரே ?
தைத்த முள்ளுக்கு
ஆண்டி செப்டிக்
அவசியமன்றோ
தாவா பணிக்கு
THE MESSAGE CD
வேண்டாம் அன்பர்களே
எச்சில் துப்பும்
படிக்கனில்
பால் குடிக்காதீர்
மாந்தரே
மு.செ.மு. சபீர் அஹமது
எச்சில் துப்பும்
ReplyDeleteபடிக்கனில்
பால் குடிக்காதீர்
மாந்தரே
Super
அருமையான விலக்கம். மாற்று மத நண்பர்களுக்கு தி மெசேஜ்(The Message)ஒரு அற்பணம் ஆனால் இதில் நடித்து இருப்பதோ பீட்டரும், காட்டரும்
ReplyDeleteஆல்பர்ட்டு தானே.