.

Pages

Tuesday, June 2, 2015

அதிரையில் ADT நடத்தும் தொடர் தாவா பயிற்சி !

கடந்த இரு வாரங்களாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள தர்பியா மையத்தில் சென்னை மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவைச் சேர்ந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'தாவா ஏன்? எப்படி? என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் 'தாவா செய்ய நம்மை நாமே தயார் செய்து கொள்வது எவ்வாறு? என்ற தலைப்பிலும் இளைஞர்கள் மற்றும் தாவா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் பயிற்சி வகுப்புக்கள் தொடரவுள்ளன. இந்த பயிற்சி களத்திற்கு வரும் சகோதரர்கள் மறவாமல் தங்களுடன் தமிழாக்க குர்ஆன் பிரதி ஒன்றையும் குறிப்பெடுக்க ஏதுவாக நோட்டு புத்தகம் ஒன்றையும் தங்களுடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த வாரத்தை போன்றே வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் கீழ்க்காணும் வகையில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

1.    ALM ஸ்கூல் ஜூம்ஆ உரை
2.    பிலால் நகரில் அஸருக்குப் பின் பெண்களுக்கான பயான்
3.    மஃரிப் தொழுகைக்குப் பின் பிலால் நகரில் 'தஃவா பயிற்சி வகுப்பு'

கடந்த வாரம் நிகழ்ந்த தாவா பயிற்சி வகுப்பின் புகைப்படங்கள்:
 
இம்மை மறுமைக்கு நன்மை சேர்க்கும் இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.