இதற்கு மிக முக்கிய காரணம் 'லெமனின்' என்ற நிறமி சுரப்பது தடைபடுகிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான்.
இதனை மறைப்பதற்காக, ரசாயனம் கலந்த தரமற்ற 'டை' பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.
சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும்.
அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.
மீசைக்கும் கலர் சாயம் பூசும்போது அதில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும்
இப்போது வியாபார நோக்கத்தில் மருதாணி கலந்த டை விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் அதுவும் இயற்கைக்கு மாறான ரசயன கலப்பினால் உறுவாக்கப்படுகிறது.
எனவே டை அடிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.
Nalla advais
ReplyDelete