அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். அதற்கான சூப்பர் சலுகை திட்டத்தை அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு தற்காலிக வேலை விசா வழங்கப்படும். இதன் பெயர் எச்1 விசா. இதில் ஆறாண்டு வரை தங்கி வேலை பார்க்கலாம். இந்தியாவில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் ஊழியர்களுக்கு எல்1 மற்றும் எச்1பி விசா வழங்கப்படுகிறது. எல்1 மூலம் அமெரிக்காவில் உள்ள கம்ெபனிக்கு தன் இந்திய கம்பெனி சார்பாக வேலை செய்யலாம். ஆனா்ல், அங்கேயே தங்கி விட முடியாது. எச்1பி என்பது ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை தருகிறது. அமெரிக்காவில் உள்ள கம்பெனிக்கு இந்திய கம்பெனி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு பணி செய்ய அனுமதிக்கப்பட்ட ஊழியர், அங்கு வேறு கம்பெனிக்கு மாறலாம்.
இப்படி எச்1பி விசா மூலம் அனுப்பி வைக்கப்படும் இந்திய ஊழியர்கள், அமெரிக்காவில் உள்ள, குறிப்பிட்ட கம்பெனியில் பணியாற்றுவதாக சொன்னாலும், அவர்கள் வேறு கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்ற புகார் கிளம்பியது. அமெரிக்க ஊழியர்களை விட, இந்திய ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு. மேலும், முக்கிய துறைகளில், குறிப்பாக சாப்ட்வேர் துறைகளில் சில பணிகளுக்கு இந்தியர்கள் தான் குறைந்த சம்பளத்தில் கிடைக்கின்றனர். அதனால் பல அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க ஊழியர்களை விட, இந்திய ஊழியர்களை நியமிக்க முன்வருகின்றன. சமீப காலமாக எச்1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை சில நிறுவனங்களில் அதிகரித்து வருவது தொடர்பாக புகார் கிளம்பின
வெளிநாட்டினருக்கு வேலை அளித்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தரவில்லை என்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். இப்போதே கட்டுப்படுத்தி விடுவது நல்லது என்று அமெரிக்காவில் வேலையின்மைக்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவாகவும் போராடும் அமைப்புகள், குடியேற்றத்துறை அமைச்சகத்துக்கு மனுக்களை அளித்து வருகின்றன.
இந்த நிலையில், டிஸ்னி வேர்ல்டு, கலிபோர்னியாவில் உள்ள எடிசன் எலக்ட்ரிக் கம்பெனி ஆகியவற்றில் அதிக அளவில் எச்1பி விசாவில் உள்ள இந்தியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் வேறு வழியின்றி, குடியேற்றத்துறை அவசரமாக விசாரணையில் இறங்கியது. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், தாங்கள் ஒப்பந்தம் போட்ட அமெரிக்க கம்பெனியை தவிர வேறு கம்பெனிக்கு ஆட்களை அனுப்ப கூடாது; அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் எச்1பி விசா எண்ணிக்கையை ஆண்டுதோறும், சில குறிப்பிட்ட துறைகள் தவிர, பல துறைகளில் குறைத்து கொள்ள முடிவும் செய்துள்ளது குடியேற்றத்துறை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பல இந்திய நிறுவனங்களை நிலைகுலைய வைத்தது. இனி ஊழியர்களை அனுப்புவது கஷ்டம் தான் என்று எண்ணின. இந்த நிலையில் அடுத்த அதிரடியை அதிபர் ஒபாமா நேற்று அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திறன் அளிக்கும் வகையில் எச்1 விசா அளிக்கப்படும்; அவர்கள் ஆறாண்டு தங்கி கொள்ளலாம் என்று குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி. மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்ததும் ‘ஆப்ஷனல் ட்ரெயினிங் ப்ரோகிராம்’ என்ற அடிப்படையில் எச்1 விசா அளிக்கப்படும். அதன்படி, அவர்கள் ஆறாண்டு வரை தங்கி வேலை பார்க்கலாம். இதுவரை, இந்த வெளிநாட்டு மாணவர்கள் 12 முதல் 29 மாதங்கள் வரை தங்கிக்கொள்ளலாம் என்று தான் விதிமுறை இருந்தது. இது தற்போது மாற்றியமைக்கப்பட்டு, ஆறாண்டு வரை தங்க சலுகை தரப்பட்டுள்ளது. இதனால் எச்1பி விசா வைத்திருப்போருக்கு உள்ள தேவை குறையலாம்; பல அமெரிக்க நிறுவனங்கள் எச்1 விசா பெற்றுள்ள மாணவர்களை வேலைக்கு பணியமர்த்தலாம். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம், ஒரு பக்கம் குறைவான சம்பளம் தரலாம்; இன்னொரு பக்கம் திறமையானவர்கள் கிடைக்கலாம். அதே சமயம், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு. ஒபாமாவின் இந்த புதிய திட்டத்துக்கும் உள்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எப்1...எச்1 க்கு மவுசு எச்1பிக்கு இனி குறையும்
அமெரிக்காவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா எப்1. இதை பெற்று அவர்கள் பட்ட, மேற்படிப்பை முடிக்கலாம்.
அதன் பின், புதிய முறைப்படி, 6 ஆண்டு தங்கி கொள்ளலாம். அதற்காக அவர்களுக்கு தரப்படும் விசா எச்1. அதற்கு மேல் தங்க முடியாது.
எச்1பி, விசா, இந்திய ஊழியர்கள் அங்கு தங்கி வேறு கம்பெனிகளுக்கு கூட போக வகை செய்கிறது. இனி இதற்கு கட்டுப்பாடு அதிகரிக்கலாம்.
‘ஸ்டெம்’ படிப்புக்கு அங்கே ஆள் இல்லை
அமெரிக்காவில் மேற்படிப்பில் முக்கியமானது ‘ஸ்டெம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் படிப்புகள் தான். STEM என்பது முதலெழுத்தில் துவங்கும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம். இந்த படிப்புகளில் படித்து மேற்படிப்பு முடித்த அமெரிக்க மாணவர்கள் குறைந்து வருகின்றனர். இதில் திறமையான மாணவர்கள் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு தான் இப்போது கிராக்கி.
இதற்கு முன் அதிபராக இருந்த பலரும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததால் வேலைக்கான விசாக்கள் தருவதில் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
ஆனால் ஒபாமா, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களின் திறமைக்கு அதிகம் மதிப்பு தருபவர். இந்திய மாணவர்களிடம் உள்ள கணித, அறிவியல், தொழில்நுட்ப அறிவை அமெரிக்க மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்று முன்பே அறிவுரை கூறியிருந்தார். அவர் ஆட்சியில் பல சலுகைகளை அளித்தார். எச்1பி விசாவில் பணி செய்யும் வெளிநாட்டவர், தன் மனைவியை எச்1 விசா மூலம் அழைத்து வரலாம்; அது மட்டுமின்றி, எச்4 விசாவில் இங்கு பணியும் செய்யலாம் என்றும் சலுகை அளித்தார்.
ஒபாமாவின் சலுகைகளை எதிர்த்து வரும் சக் கிராஸ்லி போன்ற எம்பிக்கள், இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா சலுகையையும் எதிர்த்துள்ளனர். உள்நாட்டு குடியேற்ற பாதுகாப்பு துறை செயலாளர் ஜெக் ஜான்சனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஓபிடி’ பயிற்சி திட்டத்தின் மூலம் எச்1 விசா அளிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள், இங்கேயே தங்கி பணியாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்க மாணவர்களுக்கு தான் ஆபத்து’ என்று கூறியுள்ளார்.
நன்றி:தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.