வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஷமீல் அஹமது (26). இவரை ஒரு வழக்கு தொடர்பாக அப்போது பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டதால் காயமடைந்த ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், முஸ்லிம்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் நகரக் காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை இரவு திரண்டனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேலூரில் இருந்து சிறப்பு அதிரடிப் படை போலீஸார் ஆம்பூருக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவியது.
பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் அண்மையில் வாணியம்பாடி கலால் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் தொடர்ந்து விசாரணை என்ற அடிப்படையில் கைதிகளை கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது, இவர்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது, கைதியை விசாரித்து முறையாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் அதை விடுத்து தாங்களே சட்டத்தை கையில் எடுத்தால் காவல் துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
ReplyDeleteசி பி ஐ விசாரணைக்கு வழக்கை விசாரித்தாலும் ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜை கைது செய்ய குறைந்தது 15 வருடங்களாவது ஆகும் இந்தமாதிரி லட்சணம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் நடந்தது, இப்படி நடப்பதால் தான் தொடர்ந்து பல கொலைகள் காவல்நிலையத்தில் நடக்குது.
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மட்டும் களத்தில் காணப்படுகிறார்கள் மற்றவர்கள் என்னாச்சு?நாங்கள் சிறுபான்மை காவலர்கள் என்று ஓட்டு வாங்குபவர்கள் எங்கே?