இதன் கிளையை அதிரையில் துவங்குவதற்கான தீவிர ஆலோசனையில் அதிரையை சேர்ந்த தன்னார்வலர்கள் இறங்கினர். தொடர்ந்து இதற்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளில் மரைக்கா இத்ரீஸ் தீவிரமாக ஈடுபட்டார். இவருடைய ஆர்வத்துக்கு தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்கள் பக்கபலமாக இருந்து வந்தார். இதையடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை துவங்கப்பட்டது. இதில் 8 பேர் நிர்வாக பொறுப்புக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிரை ரெட் கிராஸ் சேர்மனாக மரைக்கா இத்ரீஸ், துணை சேர்மனாக இர்ஃபான் சேக், செயலாளராக நிஜாமுதீன், துணை செயலாளராக அபூதாஹிர், பொருளாளராக ஹாஜி எஸ் ஏ அப்துல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சார்லஸ், ஆறுமுகச்சாமி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை அதிரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. சுப்பையன் அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ரெட் கிராஸ் சேவையை ஆர்வத்துடன் செயல்படுத்துவது குறித்தும், இரத்த தானம் முகாம்களை நடத்தி இரத்த கொடையாளர்களிடமிருந்து அதிக இரத்த யூனிட்களை பெறுவது தொடர்பாக பேசப்பட்டன.
மேலும் அதிரையில் இரத்த தானம் முகாம் நடத்துவதும் குறித்தும், அவசரகால முதலுதவி பயிற்சி முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அதிரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் சார்பில் அதிரையில் நடத்த இருக்கும் அவசரகால முதலுதவி பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. சுப்பையன் அவர்களை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதில் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா, தஞ்சை ரெட் கிராஸ் சேர்மன் மருத்துவர் சின்னச்சாமி, தமிழ்நாடு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எட்வின், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் திருமதி ராதிகா மைக்கேல், செந்தில், தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் சந்திரா, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ், செயலாளர் நிஜாமுதீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சமியுல்லாஹ் மற்றும் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர் கமால் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.








Appreciate. Very good. Congrats.
ReplyDeleteAppreciate. Very good. Congrats.
ReplyDelete