இதையடுத்து அதிரை காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி அதிரையின் பிரதான பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரையின் முக்கிய பகுதியில் 'காவல்துறையின் அறிவிப்பும்' வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை, 1ம் தேதி முதல், ஹெல்மெட் போடுவது கட்டாயமாகிறது. மேலும், ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட, ஹெல்மெட்டே போட வேண்டும் என்றும் ஹெல்மெட் இல்லாமல் பிடிபட்டால், அவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கி வந்து, அதற்கான ரசீதை காண்பித்த பின்னரே, அவர்களிடம் டூ வீலரை ஒப்படைக்க வேண்டும் இது தான் நீதிபதி சொன்ன தீர்ப்பு. போடாவிட்டால் என்னவாகும்; ஹெல்மெட் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம். இதே தவறை 2வது, 3வது முறை செய்தால் தலா 300 அபராதம் என்று சட்டம் சொல்லுதுஆனால் அப்படி வாங்க மாட்டார்கள் பொதுமக்களிடம் கறந்து விடுவார்கள்.
ReplyDeleteதலைகவசம் என்பது உயிர்கவசம் எனவே ஹெல்மெட் போடுங்க உயிரை காத்திடுங்க, ஹெல்மெட் அணிவதை நிரந்தர சட்டமாக்கி போலீசார் கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வுக்கு நன்றிகள்.