இவரது வார்டு பகுதிகளில் ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் முட்புதர்களால் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதியுற்று வந்தனர். நமது பகுதியை நாமே சுத்தப்படுத்தினால் என்ன ? என எண்ணிய கவுன்சிலர் அப்துல் லத்திப். தனது வீட்டில் இருந்த அருவாளை கையில் எடுத்துக்கொண்டு கூடவே பேரூராட்சி துப்புரவு ஊழியர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு முட்புதர்கள் மண்டிக்காணப்படும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார். இவரது முயற்சிக்கு பலனளிக்கும் விதத்தில் சில மணி நேரங்களில் அந்த பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கிறது.
'எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். இவரைப்போல் அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என கேட்டுக்கொண்டனர்.
Nice job
ReplyDeleteஒவ்வொரு கௌன்சிலர்கலும் தங்கள் கடமைகள் செய்தால் தான் வார்டு தூய்மை அடைவதோடு சுகாதாரமாக இருக்கும், ஒரு சிலரோ தங்களுக்கு அடைமொழியாக பதவியை பயன்படுத்துபவர்களின் மத்தியில் இவரு ஒரு எடுத்துக் காட்டு. இவரின் எண்ணங்களின் செயல்பாடு தான் இது - பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
ReplyDelete