.

Pages

Friday, June 5, 2015

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிரை சேர்மன் உண்ணாவிரதம் இருக்க முடிவு ?

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக ஆங்காங்கே குண்டு குழியுமாக காட்சி தரும் சாலைகள் மறு சீரமைப்பு, அதிரையின் முக்கிய பகுதிகளின் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துவதில் பேரூராட்சி நிர்வாகம் காட்டும் சுணக்கம், பேரூராட்சி பணியாளர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வருகை தராதது, பொதுமக்களின் புகார்களை அலட்சியம் காட்டுவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பல முறை சம்பந்தபட்டோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பொதுமக்களின் சார்பில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எதிர்வரும் [ 15-06-2015 ] அன்று சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்தின் அருகே மாபெரும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரை கடந்த திங்கட்கிழமை அன்று சந்தித்து புகார் அளித்தார்.

இதையடுத்து புகார் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இது தொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குனர் அவர்கள் சம்பந்தபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்துள்ளார். இதற்காக கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

3 comments:

  1. இந்த தகவலை நேற்று அதிரை பிறை இணையதளத்திற்கு அளித்த பேட்டி சேர்மன் அவர்கள் கூறியிருந்தார்.

    ReplyDelete
  2. கட்சிபாகுபாடுஇன்றிஎல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் .கட்சிபாகுபாடேநாட்டைகெடுத்தநச்சுகிருமி

    ReplyDelete
    Replies
    1. கட்சி பாகுபாடு இன்றி எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றால் எல்லா கட்சியினரையும் அழைத்து சென்றல்லவா புகார் கொடுத்திருக்க வேண்டும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.