.

Pages

Saturday, June 13, 2015

பேஸ்புக் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திய தமிழக இளைஞருக்கு துபாயில் பாராட்டு !

தனியார் நிறுவனத்தில் மாத சம்பளத்தில் பணியாற்றியபடி பகுதி நேரமாக பேஸ்புக் மூலம் சர்வதேச அளவில் 500க்கும் மேற்பட்டோருக்கு சேவை மனப்பான்மையுடன் வேலைவாய்ப்பை ஏற்படுத்திய இளைஞருக்கு துபாயில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாஸ்புக் அறியாதவர்கள் இருக்கலாம் ஆனால் பேஸ்புக் தெரியாதவர்கள் மிக குறைவே என்ற அளவில் இன்றைய கால சூழல் உள்ளது. இன்றைய உலகில் மக்களிடையே சமூக வலைதளங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளது. பேஸ்புக்,டிவிட்டர் போன்ற இத்தளங்களை ஒவ்வொருவரும் அவரவர்விருப்பத்திற்கேற்க உபயோகப்படுத்துகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் மக்களுக்குபயன் தரும் வகையில் இத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

அவர்களில் ஒருவராக துபாயில் வங்கியில் பணியாற்றி வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த எஸ்.கே.வி.சேக் என்ற இளைஞர் பேஸ்புக் தளத்தில் Kilakarai Classified 'கீழக்கரை கிளாஸிபைட்' என்ற பக்கத்தைஉருவாக்கி உலகின் பல பகுதிகளில் கிடைக்கும வேலைவாய்ப்பு செய்திகளை இப்பக்கத்தில் அன்றாடம் தொகுத்து அளித்து வருகிறார். ஆயிரக்கணக்கானோர் இப்பக்கத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம் 500க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் இன்னும் பலர் நேர்முக தேர்வுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கிறார் இளைஞர் எஸ்கேவி.

இவரை பாராட்டி துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கினைப்பாளர் முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுரஹ்மான், முத்துபேட்டை இக்பால்,நீலகிரி ரம்ஸாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் வேலை தேடும் பலருக்கு பேருதவியாக இப்பக்கம் திகழ்கிறது. எவ்வித வியாபார நோக்கமின்றி  நடத்தப்படும் இப்பக்கத்தின் மூலம்  பலர் செய்தி  பெற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். எவ்விதமான சுய விளம்பரமுமின்றி இவர் செய்து வரும் பணியினை பலரும் பாராட்டுகின்றனர்.

துபாயில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் எஸ்.கே.வி.சேக் இது குறித்துகூறியதாவது, பணி நேரம் முடிந்து கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற அடிப்படையில் இப்பக்கத்தை தொடங்கினேன். இதன் மூலம்பலருக்கு உதவிகரமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதில்வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தியை பார்த்து நேர்முக தேர்விற்கு சென்று செலெக்ட் ஆகி பணி கிடைத்தது என்று என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் தகவல் தரும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவிருக்காது. ஆயிரக்காணக்கானோர் இதை விடபல மடங்கு சேவை செய்து வருகிறார்கள். நாங்கள் செய்து வருவது அதில் ஒருதுளிதான் என தெரிவித்தார்.

நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.