.

Pages

Friday, June 5, 2015

அதிரையில் ரெட் கிராஸ் நடத்திய முதலுதவி மற்றும் வரும்முன் காப்போம் பயிற்சி முகாம் !

அதிரை அடுத்துள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் தஞ்சை ரெட் கிராஸ் சார்பில் அவசரகால முதலுதவி மற்றும் வரும்முன் காப்போம் பயிற்சி முகாம் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற முகாமில் தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து ரெட் கிராஸ் ஆற்றி வரும் பொதுநல பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். முகாமிற்கு மருத்துவர் எட்வின், பயிற்சியாளர் துரை மாணிக்கம், அதிரை ரெட் கிராஸ் சேர்மன் இத்ரீஸ் மரைக்கா மற்றும் எரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துக்கிருஷ்ணன், ஏரிபுறக்கரை கிராம மீனவர் சங்க தலைவர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மருத்துவர் எட்வின், பயிற்சியாளர் துரை மாணிக்கம் ஆகியோர் முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் செய்து இருந்தார். இதில் அதிரை மற்றும் ஏரிபுறக்கரை ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

5 comments:

  1. செஞ்சிலுவை சங்கம் முதல் உதவி மற்றும் வரும்முன் காப்போம் பயிற்சி முகாம் நமதூரில் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதில் நமதூர் சகோதரர் மறைக்கா இத்ரீஸ் அவர்கள் அதிரை ரெட் கிராஸ் சங்கத்தின் சேர்மன் என்பது வரவேற்கத்தக்கது. இதனால் நமதூருக்கு பல உதவிகள் செய்ய, கிடைக்க வாய்ப்பு உண்டு.

    முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் காட்டியிருப்பது தன்னார்வ தொண்டு நிறுவனங்களக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இப்படிப்பட்ட நிகழ்வுகளில் நம்மவர்கள் பங்குபெறுவது சிறப்புக்கிர்யா விஷயமே.

    ReplyDelete
  2. ரெட்கிரஸ்ஸ் சேவை அதிரைக்கு மிகவும் அவசியம். இதன முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த வேண்டியது தன்னார்வலர்களின் குறிக்கோலாக இருக்க வேண்டும்.

    மேலும். இதனை முன்னின்று செயல்படுத்தும் அதிரை தன்னார்வலர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

    இதுபோன்ற மருத்துவ அவசர பயிற்சிகளை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்

    ReplyDelete
  3. ரெட் கிராஸ் நமது ஊருக்கு அவசியம் தேவை, மரைக்கா இத்ரீஸ் சேர்மன் வாழ்த்துக்கள் (good selection), மார்க்க எல்லைக்குள் பயன்படுத்தவும் துவா செய்கிறேன்

    ReplyDelete
  4. ரெட் கிராஸ் நமது ஊருக்கு அவசியம் தேவை, மரைக்கா இத்ரீஸ் சேர்மன் வாழ்த்துக்கள் (good selection), மார்க்க எல்லைக்குள் பயன்படுத்தவும் துவா செய்கிறேன்

    ReplyDelete
  5. Vaaltthukkal.but maraikka Idrees phone pannunaaley phone attend panna maattareye.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.