அதிரை நியூஸ் சார்பில் கடந்த [ 25-05-2015 ] அன்று கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் நமதூர் பகுதி பள்ளிகளில் சென்ற கல்வியாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சிறந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டது.
காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய பரிசுகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கிய விருதுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும், அதிரை நியூஸ் ஆற்றி வரும் சேவையை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் இன்று காலை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆண்டின் முதல் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மஹபூப் அலி தலைமை வகித்தார். ஏனைய ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம், மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மஹபூப் அலி அவர்களால் இந்திய தேசிய கொடி ஏற்றப்படடு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது. இதில் வாழ்த்துரை வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மஹபூப் அலி அவர்கள், அதிரை நியூஸ் ஆற்றி வரும் பொதுநல சேவை குறித்து எடுத்துரைத்தார். மேலும் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய நல்லாசிரியர் விருது, கல்விச்சேவை விருது, பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஊரளவில் முதல் மூன்று இடங்களை படித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய பரிசுகள், ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் பள்ளியளவில் முதல் இடம் படித்துள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சிறப்பு பரிசுகள், ஏழை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய கல்வி உதவித்தொகைகள் ஆகியவற்றிற்கு நன்றி கூறினார். அதிரையில் புதிதாக துவங்கிய இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மரைக்கா இத்ரீஸ் ரெட் கிராஸ் சேர்மன் பொறுப்புக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து கூறி நன்றி தெரிவித்தார்.
மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த எஸ்.ஏ முஹம்மது ஆசிப் மற்றும் பள்ளியளவில் பத்தாம் வகுப்பில் முதல் இடம் பிடித்த பிரபல இணையதள எழுத்தாளரும் அதிரை நியூஸ் நிர்வாகிகளில் ஒருவருமாகிய அதிரை மெய்சா மகன் இமாமுதீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர், இவர்களுக்கு சிறந்த விளையாட்டு வீரர் விருது மற்றும் சிறப்பு பரிசு வழங்கியமைக்கு அதிரை நியூஸுக்கு நன்றி தெரிவித்தார். பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் நாகராஜன், அஷ்ரப் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக பள்ளியின் தமிழ்த்துறை ஆசிரியர் அஜீமுதீன் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டனர்.
நிஜாம்அவர்கள்பணிசிறக்கவாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன் ஹலீம் திமுக
வாழ்த்துக்கள் நிஜாம் இத்ரிஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜாம் இத்ரிஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜாம் இத்ரிஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜாம் இத்ரிஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete