.

Pages

Saturday, June 6, 2015

தமாகா நடத்திய பூரண மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் எம்.எம்.எஸ் பஷீர் அஹ்மது பங்கேற்பு !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தஞ்சையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் தஞ்சாவூரில் பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். மூப்பனார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான என்.ஆர். ரெங்கராஜன் பேசியது:
எதிர்கால சந்ததியை காப்பாற்ற பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக போராடும் கடமை அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை, த.மா.கா. தலைவர் வாசன் எப்படியாவது நிச்சயம் கொண்டு வருவார். மதுஒழிப்பு போராட்டங்களுக்கு பெண்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் பேசும்போது,
எதிர்கால சமுதாயம் தழைத்திட தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திருஞானசம்மந்தம், சுரேஷ் மூப்பனார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி சாமி, பிஎல்ஏ. சிதம்பரம், என்.ஆர்.நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் அதிரை எம்.எம்.எஸ் பஷீர் அஹமது மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
  
 
 
 
 

3 comments:

  1. //ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான என்.ஆர். ரெங்கராஜன் பேசியது:
    எதிர்கால சந்ததியை காப்பாற்ற பூரண மது ஒழிப்புக்கு எதிராக போராடும் கடமை அனைவருக்கும் உள்ளது// வாக்கிய பிழை. மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !

      வாக்கிய பிழை சரிசெய்யப்பட்டது.

      Delete
  2. சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள், குளம் வெட்டினர், மரம் நட்டனர், ஆனால், இன்றைய அரசியல் மன்னர்களோ, ஊரெங்கும் சாராயக் கடையை திறந்து, விற்பனையில் சாதனை படைக்கின்றனர், அறிந்தோ, அறியாமலோ, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, குடித்துவிட்டு, மண்ணிலும், மரத்தின் அடியிலும் மயங்கி விழுந்தால் கூட, உதவி செய்ய மனிதர்களும் இல்லை; மருத்துவமும் இல்லை.அரசின் நிதி ஆதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் குடி மகன்கள் குடித்துவிட்டு விபத்தில் சிக்கினால், இன்சூரன்ஸ் பணம் கூட கிடைக்காது. ஆகவே, அவர்கள் வாங்கும் குவார்ட்டர் 60 ரூபாயுடன், இரண்டு ரூபாய் சேர்த்து வசூலித்து, ஒரு காப்பீடு வழங்கினால், மரணத்திற்குப் பின், அவர்களின் குழந்தைகள் அனாதை ஆவதும், வறுமையால் பெண்கள் தடம்புரள்வதும் தவிர்க்கப்படும். பூரண மதுவிலக்கு தமிழ் நாட்டில் நடக்காத காரியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.