கூட்டத்திற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை பொருளாளர் எஸ் ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் முன்னிலை வகித்தார்.
அதிரை கிளை துவங்க ஒத்துழைப்பும் ஊக்கமும் வழங்கிய தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா அவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு சுப்பையன் அவர்களுடன் கடந்த புதன்கிழமை அன்று நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
அதிரையில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இரத்த தானம் முகாம் நடத்துவது என்றும், இதில் குறைந்த பட்சம் 100 இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்தம் தானம் பெறுவது என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் கிளை சார்பில் புதிதாக ஆயுள்கால உறுப்பினர்களை அதிகளவில் இணைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நடைபெற்றது.
முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு. ஆறுமுகசாமி வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை துணைச்செயலளார் கவுன்சிலர் அபூதாஹிர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் துணை சேர்மன் எஸ்.ஏ இர்ஃபான் சேக், செயலாளர் நிஜாமுதீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்.



தலைவர்களின் பிறந்ததின நாட்களில் மட்டும் படு பந்தாவாக இரத்த தான முகாம் விளம்பரத்துக்காக நடப்பதை சில இடங்களில் காணலாம், மற்றவர்கள் ரத்தம் கொடுத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். இதனால், ரத்தம் தானமாகக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பல இடங்களில் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையே உள்ளது. இந்நிலை மாற வேண்டும், நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete