தற்போது கோடை வெப்பம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.
பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் நுங்கு சுளைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ₹ 10 க்கு, 3 சுளைகள் வீதம் விற்க்கப்படுகிறது. இந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரிகள் கூறுகின்றனர்.


ஒவ்வொரு சீசனுக்கும் எதோ ஒரு வகை பழங்கள் நம்மளை பழைய நினைவோடு மகிழ்விக்கும். நுங்கு மீது விரலைவிட்டு சாப்பிடும் போது அதன் நீர் நம் கண்கள்மீது பட்டு குளுர்விக்கும் சுகமே தனி; சிலருக்கு சட்டை, கைலியெல்லாம் வீனாலும் நுங்கின் சுவை எதையும் பொருட்படுத்தாது. வெயில்காலத்தில் தென்னந்தோப்பில் நுங்கை பறித்து வயிர்முட்ட குடித்து அருகிலுள்ள (கிராமத்தில்)ஓடையில் அல்லது குளத்தில் கும்மாளம் போட்டு வீடு திரும்புவதே .... என்ன சுகம் அடடா! நொங்கை பாலில் போட்டோ அல்லது மோரில் போட்டோ லெசியாக சாப்பிடலாம்.. நோகாமல் நொங்கு திங்க ஆசையா? ம்ஹும்.
ReplyDelete