.

Pages

Tuesday, April 5, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 175 மாணவ, மாணவிகள் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஏப்-4
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் மாணவ, மாணவிகள் 27 பேர் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மையம் சார்பில் நடந்த வளாக வேலைவாய்ப்பு தேர்வு மற்றும் நேர்காணல் கல்லூரியில் நேற்று ஏப்-4 ல் நடந்தது. இதில் அமெரிக்கா டலாஸ், டெக்ஸாஸ், ஆகிய மகாணங்களில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருச்சி ஐடியூஆர்ஏ டிசைன்ஸ் சிஸ்டம் என்ற நிறுவனம் தேர்வு நடத்தியது. இதில் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் 175 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 43 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்று இறுதியில் 27 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.

வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர். முகாம் ஏற்பாட்டை கல்லூரி தொழில் வழிகாட்டி மையத்தின் அமைப்பாளர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஏற்பாடு செய்தனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.