.

Pages

Tuesday, April 5, 2016

தஞ்சாவூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் முழு விவரங்கள் !

ஒரத்தநாடு
பெயர்: ஆர். வைத்திலிங்கம்.
வயது: 60.
சொந்த ஊர்: தெலுங்கன்குடிகாடு,
ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி: இளங்கலைப் பட்டப்படிப்பு.

பதவி: 2001, 2006, 2011 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார். இதே தொகுதியில் தற்போது நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். இவர் 2001 - 2006-ம் ஆண்டுகளில் தொழில் துறை, ஊரகத் தொழில் துறை, வனத்துறை அமைச்சராகவும், 2011 - 2016-ம் ஆண்டுகளில் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

கட்சிப் பொறுப்பு: தொடக்கக் காலத்தில் தெலுங்கன்குடிகாடு கிளைக் கழகச் செயலர். 1985-ம் ஆண்டு முதல் ஒரத்தநாடு ஒன்றியக் கழகத் துணைச் செயலராகவும், 1995-ம் ஆண்டு முதல் ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலராகவும், 2003-ம் ஆண்டு முதல் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தொழில் - விவசாயம்.

குடும்பம்: பெற்றோர் ரெங்கசாமி - முத்தம்மாள், மனைவி வி. தங்கம், மகன்கள் பிரபு - விவசாயம், ஆனந்த பிரபு - மருத்துவர், சண்முக பிரபு - மருத்துவர், மகள் பிரதீபா.

தஞ்சாவூர்
பெயர்: எம். ரெங்கசாமி
வயது: 60.
சொந்த ஊர்: மலையர்நத்தம்,
பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி: பி.எஸ்ஸி., பி.எல்.

பதவிகள்: 1996 - 2001-ம் ஆண்டுகளில் ஒன்றியக் குழு உறுப்பினர், 2011 - 2016-ம் ஆண்டுகளில் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், 2011-ம் ஆண்டு முதல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர், 2011-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்.

கட்சிப் பொறுப்புகள்: 1972-ம் ஆண்டில் கட்சியில் இணைந்த இவர் மாணவரணி, இளைஞர் அணி, ஜெயலலிதா பேரவையில் பொறுப்பாளர், 1996-ம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் விவசாயப் பிரிவு மாவட்டச் செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

தொழில்: விவசாயம்.

குடும்பம்: மனைவி ஆர். இந்திரா, மகன்கள் - ஆர். மனோபாரத், ஆர். வினோபாரத்.

திருவிடைமருதூர்
பெயர்: யு. சேட்டு.
வயது: 50.
கல்வி: பி.எஸ்ஸி. விலங்கியல்.
ஊர்: மேலவெளி முதன்மைச் சாலை,
திருப்பனந்தாள்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

கட்சிப் பொறுப்புகள்: கட்சியில் 1991-ம் ஆண்டில் இணைந்த இவர் 1994-ம் ஆண்டில் முள்ளுக்குடி கிளைக் கழகப் பிரதிநிதி, 1998-ம் ஆண்டில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலர், திருப்பனந்தாள் பேரூர் கழகப் பிரதிநிதி.

தொழில்: விவசாயம்.

குடும்பம்: தாய் உ. ஜானகி, மனைவி சே. உஷா,

மகள் சே. தர்மசம்வர்த்தினி.

கும்பகோணம்
பெயர்: ராம.ராமநாதன்.
வயது: 52, (21-6-1964).
கல்வி: பி.காம், எல்.எல்.பி.
ஊர்: கும்பகோணம்.

பெற்றோர்: கூடலூர் டாக்டர் ஜி.ஆர்.ராமச்சந்திரசாஸ்திரிகள் - செண்பகம் அம்மாள் (லேட்). 104 வயதாகும் இவரது தந்தை குடியரசு தலைவரின் விருது பெற்ற அறிஞர்.

கட்சிப் பொறுப்பு: 1979-80-ல் அதிமுகவில் இணைந்த இவர் எம்ஜிஆர் இளைஞரணி, வட்டக் கழகச் செயலர், நகர ஜெயலலிதா பேரவைத் தலைவர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பால்வளத் துறை தலைவர், பொது நிறுவனங்கள் குழுத் தலைவர். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது குடந்தை பரஸ்பர சகாயநிதி நிறுவனத்தின் தலைவராகவும், கும்பகோணம் நகர அதிமுக செயலராகவும் உள்ளார்.

பதவி: 1991 முதல் 1996 வரை கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

பிறந்த ஊர்; ராமேஸ்வரம்.

குடும்பம்: இரண்டு மூத்த சகோதரர்கள், 3 மூத்த சகோதரிகள்.

திருவையாறு
பெயர்: எம்.ஜி.எம். சுப்பிரமணியன்.
வயது: 67.
சொந்த ஊர்: மணத்திடல், கோனேரிராஜபுரம் (அஞ்சல்), திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி: முதுகலைப் பொருளாதாரம்
(முடிக்கப்படவில்லை).

பதவிகள்: 1980 - 84-ம் ஆண்டுகளில் திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், 1996 - 2001-ம் ஆண்டுகளில் திருவையாறு ஒன்றியக் குழு உறுப்பினர், 2001 - 2006-ம் ஆண்டுகளில் திருவையாறு ஒன்றியக் குழுத் தலைவர், 2013-ம் ஆண்டு முதல் கருப்பூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்.

கட்சிப் பொறுப்புகள்: 1972-ம் ஆண்டில் கட்சியில் இணைந்த இவர் மணத்திடல் கிளைக் கழக அமைப்பாளர், 1994-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரு முறை திருவையாறு ஒன்றியக் கழகச் செயலர், 2002-ம் ஆண்டில் மாவட்டச் செயலர், தற்போது தொகுதிக் கழகச் செயலர்.

தொழில்: விவசாயம்.

குடும்பம்: மனைவி - டாக்டர் ஜயக்குமாரி சுப்பிரமணியன் (மாவட்ட ஊராட்சிக் குழுத்  துணைத் தலைவர்). மகள்கள் டாக்டர் எஸ். புவனேஸ்வரி, ஸ்ரீதிருமகள் தேவி, மகன் பொறியாளர் எஸ். ராஜதுரை கார்த்திகேயன்.

பேராவூரணி
பெயர்: மா. கோவிந்தராஜன்.
வயது: 66, (07.06.1950).
ஊர்: பேராவூரணி.
கல்வி: 10-ம் வகுப்பு.
தந்தை: மாரிமுத்து சேர்வை.
தாயார்: வள்ளியம்மை அம்மாள்.
குடும்பம்: மனைவி செந்தமிழ்ச்செல்வி,
ஒரு மகனும், இரண்டு மகள்கள் உள்ளனர்.

கட்சிப் பொறுப்பு: கடந்த 17 ஆண்டுகளாக பேராவூரணி நகர அதிகமுக செயலராகவும் 7 ஆண்டுகளாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராகவும், தற்போது அதிமுக தொகுதி செயலராகவும் உள்ளார்.

பட்டுக்கோட்டை
பெயர்: சி.வி. சேகர்.
வயது: 54, (20.05.1962).
கல்வி: பி.ஏ.பி.எல் (இளங்கலை,
பிஷப்ஹீபர் கல்லூரி- திருச்சி, சட்டப்படிப்பு:சட்டக் கல்லூரி, திருச்சி.)
ஊர்: ஆலத்தூர், பட்டுக்கோட்டை வட்டம்.

பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் 1986-ம் ஆண்டிலிருந்து வழக்குரைஞர் தொழில் செய்து வருகிறார். மேலும், நோட்டரி பப்ளிக் மற்றும் உறுதிமொழி ஆணையராகவும் உள்ளார். இது தவிர மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சித் தலைவராகவும் உள்ளார்.

தந்தை: வெள்ளைச்சாமி.
தாயார்: குஞ்சம்மாள்.
மனைவி: கலைச்செல்வி. (எம்.ஏ.,பி.எட்., பட்டதாரி)
மகன்: திலீப் (பி.டெக். பட்டதாரி)
மகள்: கண்மணி (பிளஸ் 2 மாணவி)

பதவி: மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர், மாவட்ட அதிமுக இளைஞரணி முன்னாள் செயலர்.

பாபநாசம்
பெயர்: இரா. துரைக்கண்ணு
வயது: 68
சொந்த ஊர்: ராஜகிரி, பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி: இளங்கலைப் பட்டப்படிப்பு.

பதவி: 2006 - 2011, 2011 - 2016-ம் ஆண்டுகளில் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், முன்பு மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர்.

கட்சிப் பொறுப்புகள்: 1972-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த இவர் கிளைக் கழகச் செயலர், மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலராக உள்ளார்.

குடும்பம்: மனைவி பானுமதி, இரு மகன்கள், 4 மகள்கள்.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.