.

Pages

Wednesday, June 19, 2013

தொகுதி பிரச்சனை குறித்து அதிரை பேரூராட்சியின் 10 வது வார்டு உறுப்பினர் சகோதரி சபூரன் ஜெமீலா அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ] !

அதிரைப் பேரூராட்சியின் 10 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஏற்படும் கால தாமதத்தைக் கண்டித்து பொதுமக்களின் சார்பாக சாலை மறியல் போராட்டத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டு பிரசுரமாகவும், நாளிதழ் மற்றும் 'அதிரை நியூஸ்' தளத்திலும் செய்தியாக வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவசரமாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தபட்டோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வருகின்ற இரண்டு மாதத்திற்குள் சரிசெய்து கொடுப்பதாக எழுத்து மூலம் கையொப்பமிட்டு உறுதி செய்ததையடுத்து கடந்த [ 13-06-2013 ] அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 10 வது வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமீலா அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி தொகுதி பிரச்சனை குறித்து அவர்களின் கருத்தைக்கேட்டோம்.

8 comments:

  1. வெல்டன் ஒரே ஒரு காங்கிரஸ் மெம்பெர் இருந்தாலும் சாதிசுடான்கப்பா 10 வது வார்டு ன் அணைத்து தேவைகளும் நிறைவேற உறுப்பினர் மற்றும் அதிரை நியூஸ் ன் சேவை
    தொடர வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  2. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.!

    அதிரை நியூஸ் சார்பாக சகோதரர் சாகுல் ஹமீது பேட்டியும் சிறப்புடன் இருந்தது. 10-வது வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமீலா அவர்களின் ஆர்வமிக்க பொதுநலத்தொண்டு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்களுடன் ''துவா'' செய்கிறேன்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    அதிரை நியூஸ் சார்பாக சகோதரர் சாகுல் ஹமீது பேட்டியும் சிறப்புடன் இருந்தது. 10-வது வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமீலா அவர்களின் ஆர்வமிக்க பொதுநலத்தொண்டு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்களுடன் ''துவா'' செய்கிறேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. 10-வது வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமீலா அவர்களின் ஆர்வமிக்க பொதுநலத்தொண்டு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்களுடன் ''துவா'' செய்கிறேன்.

    ReplyDelete
  5. தைரியமான பெண்மணி நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டிட்டிங்க. உங்களை உறுப்பினராக பெற்றதற்கு அதிரை பெருமையடைகிறது

    ReplyDelete
  6. அதிரை நியூஸ் சார்பாக சகோதரர் சாகுல் ஹமீது பேட்டியும் சிறப்புடன் இருந்தது. 10-வது வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமீலா அவர்களின் ஆர்வமிக்க பொதுநலத்தொண்டு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்களுடன் ''துவா'' செய்கிறேன்.

    ReplyDelete
  7. சலாம்
    ஆக்கபூர்வமான நல்ல செய்தி.பேட்டி எடுப்பவர் எளிய பேச்சு தமிழில் எப்பொழுதும் பேசுவது போல் பேசலாமே

    ReplyDelete
  8. வார்டு மெம்பரின் அறிவுப்பூர்வ அணுகுமுறை சமுதாய பெண்களுக்கு நல்ல முன்மாதிரி. வாழ்த்துகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.