.

Pages

Saturday, June 8, 2013

நமது மாவட்ட பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் S.S. பழனி மாணிக்கம் MP அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ]

இன்று அதிரைக்கு வருகை தந்த நமது மாவட்ட பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் S.S. பழனி மாணிக்கம் MP அவர்களை சந்தித்து அதிரை பொதுநலன் சார்ந்த கீழ்கண்ட இரண்டு கேள்விகளை 'அதிரை நியூஸ்' சார்பாக முன்வைத்தோம்.

1. அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் கல்விக் கடன் திட்டம்  அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக அதிரையில் செயல்பட்டு வரும் மத்திய வங்கிகள் சிலவற்றில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கல்விக்கடன்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. தகுதி இருந்தும் கடன் வழங்க மறுப்பது ஏன் ? என்ற குற்றச்சாட்டு குறித்தும்...

2. அதே போல் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகளில் குறிப்பாக திருவாரூர் - பட்டுக்கோட்டை வரை உள்ள பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவது ஏன் ? என்பது குறித்தும் கருத்துக்கேட்கப்பட்டது.

5 comments:

  1. அமைச்சரிடம் தேவைகளை கேட்டதற்கும், சொந்தங்களை காணச்செய்தமைக்கும் அதிரை நியூசுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. S.S. பழனி மாணிக்கம் MP அவர்களிடம் அதிரை நியூஸ் எடுத்துவைத்த கோரிக்கை மிக அவசியமானவையே.! இத்தகைய கோரிக்கைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நினைவூட்டிக்கொண்டிருந்தால் தான் என்றாவது ஒரு நாள் விடிவு ஏற்ப்படும்.

    ReplyDelete
  4. சகோ. சாவன்னா. சிறந்த பேட்டியாளராக வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. நல்லதோர் வாய்ப்பு அதிரை நியூஸ்க்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.