.

Pages

Thursday, June 27, 2013

அதிரையில் மனநல காப்பகம் / முதியோர் இல்லம் அவசியமா !?

அதிரை நகரில் சுற்றித்திரியும் மனநிலை பாதித்தோர் ஸாரி வயதுவந்த குழந்தைகள் என்றே இவர்களை அழைக்கவேண்டும். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகமானோர் தெருக்களின் முக்கிய வீதிகளில் உலா வருவதை கண்கூடாக்காணலாம்.

குடும்பச்சூழல், மன அழுத்தம், நோய் உள்ளிட்ட பலவித காரணங்களால் இவர்களுக்கு மனநிலை பாதிப்பு உண்டாகிறது என்றாலும் இவர்களை அரவணைத்து பணிவிடை செய்ய யாரும் முன்வருவதில்லை.

இவர்களில் சிலர் தங்களின் அன்றாட உணவுக்காக பலரிடம் கையேந்துவதையும் நிறுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை  ஓரிருவர் மாத்திரமே இருந்த நமதூரில் இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற மனநிலை பாதித்தோரை [ மீண்டும் ஸாரி வயதுவந்த குழந்தைகளாகிய இவர்களை ] பராமரிக்க மனநலக் காப்பகம் நமதூரில் அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான  மனிதநேய ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கின்றது.

அதே போல் முதியோர் அரவணைப்பு என்பதும் சமூகத்தில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....

5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

6. தேவையான நேரத்தில் உன்ன உணவு  கொடுக்காமல் பசிக் கொடுமையால்  அவதிப்படுபவர்களும்...

7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

9. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

10. தனிமைபடுத்தப்பட்டு அருகில் உற்றார் - உறவினர் இல்லாமால் இறந்தோரும்...

நமதூரில் உண்டு !

வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்ட புலம் பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். செல்லுமிடத்தில் சிலரது சூழ்நிலை மாறும் பட்சத்தில் அங்கேயே தங்கிவிடும சூழல் அமைந்து விடுகிறது. அப்படி அங்கேயே நீண்ட நாட்கள் தங்கிவிடும் சூழ்நிலையில் அவர்களின் பெற்றோறோர்களில் சிலர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குடும்ப உறவுகளும் கைவிட்ட நிலையில் இத்தகைய பெற்றோர்கள் நம் சமுதாயத்தில் கூடிக்கொண்டே போகிறார்கள். இது யாரும் அறிந்திராத ஆச்சரியமான கசப்பானதொரு உண்மை ! வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தள்ளாத வயதினில் கவனிக்க ஆளில்லாமல் கஷ்டப்படும் நிலையில் அவர்கள் அவதியுறும் நிலை உருவாகிறது. அப்பெற்றோர்கள் அரவணைப்புக்கு ஆளில்லாமல் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

புலம்பெயர்வோர்களால் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களில் சில முதியோர்களும் உண்டு. இப்படி ஆதரவற்ற முதியோர்களை ஆதரிக்க இல்லம் ஒன்று அவசியம் வேண்டும்.

ஆகவே வயோதியர்களை அரவணைக்க மருத்துவ வசதியோடு சகல வசதியும் அமையப்பெற்ற முதியோர் இல்லம் ஒன்று நமதூருக்கும் அவசியமானதாய் தோன்றுகிறது. நல்லெண்ணம் படைத்த நம் சமுதாய மக்கள் இவற்றை உருவாக்க முன்வரவேண்டும்.

அதிரை நியூஸ் குழு

15 comments:

  1. மிக அவசியமானதொன்று...நம்மூர் முக்கியஸ்தர்கள் கவனத்தில் கொள்க இப்படிப்பட்டோர்களை பாதுகாப்பாகவும் அரவணைப்பும் மிக மிக அவசியம்

    நல்ல விழிப்புனர் பதிவு...வாழ்த்துக்கள் அ.நியூஸ் குழு

    ReplyDelete
  2. இன்றைய கால கட்டத்திற்கு எற்ற பதிவு . இவர்களை பற்றிய அக்கறை என் மனதை நெகிழ வைத்தது .
    இவர்களை அரவணைக்க நம்ம ஊரில் எவ்வளவோ சமுதாய பணி செய்யும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் முன் வர வேண்டும் .

    நல்ல விழிப்புனர் பதிவு...வாழ்த்துக்கள் அ.நியூஸ் குழு

    ReplyDelete
  3. உங்களது கட்டுறை மிக அவசியமானது அனைவராலும் யோசிக்க வேண்டியது பணம் இருந்தும் கவனிக்க ஆள் இல்லது பலர் இருக்கின்றனர் paying gust போல் தங்குவதற்கும் சிலர் தயாராகவே உள்ளனர். ஊரில் உள்ளவர்கள் முயற்ச்சி செய்தால் நானும் எனது பங்கை தருகிறேன்

    ReplyDelete
  4. நல்ல விழிப்புனர் பதிவு...வாழ்த்துக்கள் அ.நியூஸ் குழு

    ReplyDelete
  5. நமதூரில் அவசியம் ஏற்படுத்த வேண்டும். நிதி சார்ந்த அதிரை பைத்துல்மால் உள்ளிட்ட இன்னபிற சமூக அமைப்புகள் முன்வர வேண்டும்.

    காப்பகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுதோ இல்லையோ பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மத்தியில் ஒரு பய உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. தனது பெற்றோரின் நிலை கருதி கூட இருந்து கவனிக்கக்கூடிய சூழல் எதிர்காலத்தில் அமையலாம்.

    ReplyDelete
  6. சமூக விழிப்புணர்வு தரும் இந்த ஆக்கத்திற்கு தூண்டுகோலாய் இருந்த அதிரை நியூஸ் குழுவில் இடம்பெற்றுள்ள அன்புச்சகோதரர்கள் அதிரை சித்திக் மற்றும் அதிரை மெய்சா ஆகியோருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete
  7. இதனை பதிவாக வெளிக்கொண்டு வந்து அனைவரின் சிந்தனையை தூண்டிய அதிரை நியூஸ்சிற்கு முதலில் நன்றி.

    இன்றைய காலகட்டத்தில் இப்படி குடும்ப உறவுகளால் கைவிடப்பட்ட வர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். ஆகவே நல்லுள்ளம் படைத்த செல்வந்தர்கள் முன்வந்து இப்படிப்பட்டவர்களுக்காக இல்லம் ஒன்றினை அமைத்துக்கொடுத்தால் இவர்களுக்கு வாழ்வளித்த நற்ப்பெயர் என்றென்றும் நிலைப்பதுடன் இறைவனிடத்தில் நற்க்கூலியும் மறுமை வாழ்வில் நற்ப்பலனும் அடைவார்கள். அனைவரது துவாவும் ஒருங்கப்பெறலாம்.

    நல்லுள்ளம் படைத்த செல்வந்தர்களும், சமூக அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் தான் சிந்தித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

    ReplyDelete
  8. மிக அவசியமானதொன்று...நம்மூர் முக்கியஸ்தர்கள் கவனத்தில் கொள்க இப்படிப்பட்டோர்களை பாதுகாப்பாகவும் அரவணைப்பும் மிக மிக அவசியம்

    நல்ல விழிப்புனர் பதிவு...வாழ்த்துக்கள் அ.நியூஸ் குழு

    ReplyDelete
  9. இன்றைய கால கட்டத்திற்கு எற்ற பதிவு. இவர்களை பற்றிய அக்கறை என் மனதை நெகிழ வைத்தது. இவர்களை அரவணைக்க நம்ம ஊரில் எவ்வளவோ சமுதாய பணி செய்யும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் முன் வர வேண்டும்.

    நல்ல விழிப்புனர் பதிவு...வாழ்த்துக்கள் அ.நியூஸ் குழு

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி.

    கடந்த சில தினங்களுக்கு முன் நான், என் தகப்பனாரின் கூட்டாளிகளில் ஒருவரான என் மதிப்பிற்கு உரிய ஜனாப், (பெயர் வேண்டாம்) காக்கா அவர்களை சந்தித்தேன், நலம் விசாரித்து விட்டு நீண்ட நேரம் உரையாடினேன்.

    இன்று நம் மத்தியில் அனேகம்பேர் நல்ல வசதி வாய்ப்போடு இருந்தாலும், வெளியில் நல்ல செல்வாக்கோடு இருந்தாலும், நிலம் புலம் இருந்தாலும், வீட்டில் நிம்மதி இல்லை, எப்போதும் நோசுவனை.

    மனைவி, மகளோடு சேர்ந்து கொண்டு புருஷனை வெளியில் போகச் சொல்கிறாள்.

    ஆண்மகன் எல்லாவற்றையையும் பெண்களுக்கே எழுதிக் கொடுத்து விடுகின்றான், இவனுடைய பெயரில் எதுவும் கிடையாது.

    நமதூரில் இது மாதிரி சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

    இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்.

    என்னுடைய நண்பர் ஒருவருக்கு இப்படி ஒரு சம்பவம் நமதூரில் நடந்தது, விவாக ரத்தும் முடிந்தது, நல்ல வேலை A to Z எல்லா வற்றையும் ஒரு துரும்பு விடாமல் தன் பெயருக்கு வைத்து இருந்ததினால் என் நண்பர் தப்பித்தார், இல்லையென்றால் என்ன ஆகி இருக்கும்.

    சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கு.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  11. இந்த நிலை மாற ஒரே வழி ஆண்மகனுக்கு வீடு கொடுக்க வேண்டும். பெண் மாமியார் வீட்டில் வாழ வேண்டும்.

    ReplyDelete
  12. மனிதாபிமானம் மிக்க ஆக்கம் ...

    காப்பகம் மூன்று பிரிவாக செயல்பட வேண்டும் ..

    இருப்பிடம் ...உணவகம் ...மருத்தவப்பிரிவு

    உணவகத்தில் வெளியில் இருந்து டயட் உணவு

    வேண்டுவோர் மாத கணக்கு மூலம் வாங்கி

    செல்லலாம்..மருத்துவப்பிரிவில் தயாளகுணம் உள்ள

    மருத்துவர்கள் மூலம் நியாயமான கட்டணம் பெற்று

    அவர்களின் சேவையை பெற்று கொள்ளலாம் .

    இருபத்து நான்கு மணிநேர செவிலியர்

    சேவை ..இவைகளுடன் சிறப்பாக செயல்

    படுத்தலாம் ..இருப்பிடம் நல்ல முறையில்

    விசாலமாக இருக்க வேண்டும் ..மாலை நேரங்களில்

    வீட்டிற்கு வெளியே காற்றோட்ட வாசத்துடன்

    இருக்க வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ..

    மனதுக்கு பிடித்த சொற்ப்பொழிவு (சப்தம் குறைவாக)

    ஏற்பாடு செய்யலாம்..மனதுக்கு இதம் சேர்க்கும் ..

    நல்ல தகவலுடன் ஆக்கம் தந்த அருமை

    அதிரை நியூசிற்கு..நன்றிகளும் ..வாழ்த்துக்களும்

    ReplyDelete
  13. தம்பி நிஜாம் அவர்களுக்கு,

    இது பற்றி ஒரு தனி ஆக்கம் எழுதவேண்டுமென்று நினைத்து இருந்தேன். நமது ஊருக்கு மட்டுமல்ல நமது பகுதிக்கே இது போன்றதொரு அறவழி நிலையம் தேவை.

    அரவணைக்கப் பட வேண்டியவர்களை அரவணைத்து ஆதரிப்பது சமுதாயக் கடமை. பொது அமைதிக்கும் நல்லது.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  14. யாரும் கண்டுகொள்ளாத இவர்களின் நிலையை சமூக அக்கரையுடன் படம்பிடித்துக்காட்டிய சகோதரர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன். பைத்துல்மால் ஏற்கனவே ஆதரவற்றோருக்கு மாதாந்திர பென்சன் திட்டத்தை 18 ஆண்டுகளாக நடத்திவந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்ட இத்தைகையோருக்கு திட்டங்கள் இல்லை. எனினும் இன்ஷா அல்லாஹ் இதுகுறித்து நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.