.

Pages

Thursday, June 6, 2013

அதிரையில் 'அம்மா திட்டம்' முகாம் அறிவிப்பு !

அதிரையிலுள்ள ஆதாம் நகர், பிலால் நகர், மேலத்தெரு, கீழத்தெரு, புதுத்தெரு, கடற்கரைத்தெரு, தரகர் தெரு ஆகிய பகுதிகள் ஏரிபுறக்கரை வருவாய் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்டவையாகும்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதற்காக அதற்குரிய சான்றிதழ்களை ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலரிடம் மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பெறுவதுண்டு.

அதேபோல் குடும்ப அட்டை தொடர்பான விசாரணைகள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை தொடர்பாகவும் நிர்வாக அலுவலரை அனுகுவதுண்டு.
எதிர்வரும் [ 18-06-2013 ] அன்று அரசின் அம்மாதிட்டம் பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட ஏரிப்புறக்கரை கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் மாணவ மானவியர்களோடு, பொதுமக்களும் தவறாது கலந்துகொண்டு பயன் பெறலாம்.

சரி அதென்ன அம்மா திட்டம் !?
தாசில்தார் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், 'அம்மா' திட்டம் [ AMMA : Assured Maximum Service to Marginal People in All Villages ] தமிழகத்தில் துவக்கப்படுகிறது.

முதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் அணுக வேண்டி உள்ளது. எல்லா தாலுகா அலுவலகங்களிலும் தினமும், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காணலாம்.

அங்குள்ள வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை அளித்தால், விண்ணப்பம் மீண்டும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என, அதிகாரிகளுக்கு சென்று அவர்கள் பரிசீலித்து ஆய்வு செய்து சான்று, பட்டா உள்ளிட்டவற்றை வழங்க பரிந்துரைப்பர். இதற்கு நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது. அதிக அளவு லஞ்சம், ஊழலும் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில் வருவாய்த் துறை சார்பில், கிராமந்தோறும், வருவாய்த் துறை அதிகாரிகளே நேரடியாகச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்க்கும் புது திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் வாழும், கடை கோடி மக்களுக்கும் மிகையான சேவையை உறுதிப்படுத்துதல் - 'அம்மா திட்டம்' என, இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வயதானோர், ஏழைகள், பணம், நேரம் செலவழித்து, தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில், அதிகாரிகள் சென்று முகாமிடுவர். அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை, ஊராட்சியிலேயே ஆய்வு செய்து, அங்கேயே உடனடியாக வழங்கப்படும்.

இது தவிர குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை, நிலம் சம்பந்தமான பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்து தீர்வு காணப்படுகிறது. மேலும் இதன் மூலம் வருவாய்த் துறையின் சேவை துரிதப்படுத்தப்படும். இது தவிர கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள் கிழமையில் நடத்தப்படுகிறது. இதிலும், பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தில், மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை, 'மக்கள் தொடர்பு முகாம்' நடத்தப்படுகிறது. இதில், கலெக்டர் தலைமையில், அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று பொதுமக்கள் குறைகளைக் கேட்பர்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தெருக்களின் விபரம் சரியானவையா?

    ReplyDelete
    Replies
    1. பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தெருக்களில் சில அதிரை பேரூர் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்தாலும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராம நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

      அதோடு மட்டுல்லாமல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தெருக்களில் வசிக்கும் செல்வந்தர்கள் சிலர் நிலம் புலன்களை ஏரிப்புறக்கரை கிராம பகுதியில் வாங்கி வைத்துள்ளதால் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா தொடர்பான பிரச்சனைக்கு இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றுக்கொள்ளலாம்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.