.

Pages

Saturday, June 29, 2013

பல வருடங்களாக பாழடைந்துபோன கடைத்தெரு மீன் மார்க்கெட் - புதுத்தெரு பாதை பயன்பாட்டிற்கு திறப்பு !

அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான 11 வது வார்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கடைத்தெரு மீன் மார்க்கெட்டை ஒட்டிய புதுத்தெருவுக்குச் செல்லும் பிரதான பாதை ஆகும். இவை கடந்த பல வருடங்களாக பொதுமக்களின் பயன்பாடு இன்றி முட்புதர்களாலும், மரங்களாலும் சூழ்ந்துகிடந்தன. மேலும் குப்பைக் கூளங்களும், கழிவுகளும் அதிகமாக கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.





பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குறிப்பாக மாணவிகள், பரப்பரப்பான பகுதியாகிய கடைத்தெருவைச் சுற்றி செல்லக்கூடிய சூழ்நிலை இருந்துவந்தது. மேலும் அதிரையின் முக்கிய தெருக்களை இணைக்கக்கூடிய பிரதான சாலையாக இவை இருப்பதால், மாணவ மாணவிகளோடு பொதுமக்களும், வர்த்தகர்களும் அவ்வப்போது சம்பந்தபட்டோருக்கு கோரிக்கை வைப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்று [ 29-06-2013 ] காலை 8 மணி முதல் JCP இயந்திரம் மூலம் முட்புதர்கள், மரங்கள், குப்பைக்கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடைபெறும் பணிகளை உடனிருந்து அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

11 comments:

  1. ஆஹா படுஜோரான செயல்பாடுகள்

    மேலும் தொடர வாழ்த்துக்கள்....

    சரி...சி.எம்.பி லைன் பக்கம் இந்த JCP இயந்திரத்தை கொஞ்சம் அனுப்பி செடிகள் மற்றும் முர்புதுர்கள் அப்புரபடுத்துங்களேன் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகளின் தொல்லை தாங்க முடியலே

    ReplyDelete
  2. சென்ற பதிவுக்கான என்னுடைய கருத்தை பதிவதற்கு முன் மீண்டுமொரு சேவை பற்றிய செய்தி பார்த்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. இப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து மக்களுக்கும் மிக மிக அவசியமான இப் பிரதான பாதை வெகுநாளாக சரி செய்யப்படாமல் சுத்தமாக அழிந்த நிலையில் கிடந்தது. நாங்கள் சிறு பருவத்தில் புதுத்தெரு,மெயின் ரோடு மற்ற பகுதிகளுக்கு இவ்வழியாகத்தான் செல்வோம். முக்கியமாக் பெண்களுக்கு ரொம்ப வசதியாகவும் இருந்தது. இந்தப்பாதையை மீண்டும் சரிசெய்து கொடுப்பது மிக்க மகிழ்ச்சியான விசயமே.!

    இப்பணியை முன் நின்று செயல் படுத்திய பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீது ஆகியோருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  5. அதிரை நியூஸ் ஜெட் வேகத்தில் செய்திகளை தருவது அபாரம்.
    மகிழ்ச்சியான செய்தி.சகோ SH அஸ்லாம் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது,குளங்களை தூர்வார்வது நமதூர் வளர்ச்சியில் அக்கறைக்கொண்டுள்ள அனைவருக்கும் நம்பிக்கை தருகிறது.
    தொடரட்டும் மக்கள் பணி
    தீரட்டும் மக்கள் பிணி

    ReplyDelete
  6. தொய்வின்றித் தொடரட்டும் தூய்மைப் பணிகள்!

    ReplyDelete
  7. இப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து மக்களுக்கும் மிக மிக அவசியமான இப் பிரதான பாதை வெகுநாளாக சரி செய்யப்படாமல் சுத்தமாக அழிந்த நிலையில் கிடந்தது. நாங்கள் சிறு பருவத்தில் புதுத்தெரு,மெயின் ரோடு மற்ற பகுதிகளுக்கு இவ்வழியாகத்தான் செல்வோம். முக்கியமாக் பெண்களுக்கு ரொம்ப வசதியாகவும் இருந்தது. இந்தப்பாதையை மீண்டும் சரிசெய்து கொடுப்பது மிக்க மகிழ்ச்சியான விசயமே.!

    இப்பணியை முன் நின்று செயல் படுத்திய பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீது ஆகியோருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  8. இவர் தான் ஒரிஜினல் சேர்மன்.....

    ReplyDelete
  9. இப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து மக்களுக்கும் மிக மிக அவசியமான இப் பிரதான பாதை வெகுநாளாக சரி செய்யப்படாமல் சுத்தமாக அழிந்த நிலையில் கிடந்தது. நாங்கள் சிறு பருவத்தில் புதுத்தெரு,மெயின் ரோடு மற்ற பகுதிகளுக்கு இவ்வழியாகத்தான் செல்வோம். முக்கியமாக் பெண்களுக்கு ரொம்ப வசதியாகவும் இருந்தது. இந்தப்பாதையை மீண்டும் சரிசெய்து கொடுப்பது மிக்க மகிழ்ச்சியான விசயமே.!

    இப்பணியை முன் நின்று செயல் படுத்திய பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீது ஆகியோருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  10. அடுத்த 5 ஆண்டுக்கும் அஸ்லாம் அவர்கள்தான் சேர்மன்.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அழைக்கும் ஜாவியா ரோட்டில் ஜாவியாவிற்கு எதிரே அமைத்துள்ள 3 அஸ்ஸலாமு அழைக்கும் ஜாவியா ரோட்டில் ஜாவியாவிற்கு எதிரே அமைத்துள்ள 3 மின்கம்பங்களில் கடந்த 3 வருடங்களாக தெருவிளக்கே பொருத்தப்படாமல் கும்மிருட்டில் ரோடு அமைத்துள்ளது. பல முறை வார்டு உறுப்பினர் மற்றும் சேர்மனிடம் சொல்லியும் பலன் இல்லையே இந்த வேலையுடன் அதையும் செய்தால் நன்றாக இருக்கும். நோன்பு ஆரம்பிப்பதற்குள் நடக்குமா? சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது மற்றும் சகோதரர் சேக்கனா நிஜாம் இதனை இரவு நேரத்தில் படம் பிடித்து தாங்கள் வலைதளத்தில் போடுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.