.

Pages

Thursday, June 20, 2013

அதிரை ஷிஃபா மருத்துவமனையின் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் செல்லாராணி MBBS., DGO அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ] !

மகப்பேறு பணி என்பது மகத்தானது. கருவுற்ற நாள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரை கண்காணித்து ஆலோசனை வழங்கிவருவது மகப்பேறு மருத்துவரின் தலையாயக் கடமையாகும். தாய் - சேய் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் கருவுற்ற தாய்மார்கள தகுதியுள்ள மகப்பேறு மருத்துவரை மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அணுகி அவர்களின் ஆலோசனைகளைப் பெற தவறியதில்லை.
அதிரையின் பிரபல ஷிஃபா மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் செல்லா ராணி MBBS., DGO., அவர்களை சந்தித்து மகப்பேறு தொடர்புடைய கீழ்கண்ட கேள்விகளை 'அதிரை நியூஸ்' சார்பாக முன்வைத்தோம்.

1. கருவுற்றக்காலங்களில் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் என்ன ?

2. கருவில் வளரும் சில குழந்தைகளின் இருதயம் பாதிப்படைவது ஏன் ? அவற்றை நிவர்த்தி செய்துகொள்வது எவ்வாறு ?

3. கருவுற்றக்காலங்களில் குறிப்பாக சிலருக்கு உதிரப்போக்கு  அதிகளவில் ஏற்படுவதேன் ?

4. சிசேரியன் முறையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரிக்க காரணமென்ன ?

5. கருவில் வளரும் குழந்தைகளின் தலை பெரிதாக உருவாகக் காரணமென்ன ?

6. நெருங்கிய குடும்ப உறவு முறையில் திருமணம் செய்துகொண்டால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா ?

டாக்டர் செல்லா ராணி MBBS., DGO., அவர்களைப்பற்றிய சிறுகுறிப்பு :
திருநெல்வேலியை பிறப்பிடமாகக்கொண்டாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிரையிலேயே தங்கிருந்து மருத்துவ சேவையாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு மருத்துவராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் வளைகுடா நாடுகளில் ஒன்றாகிய சவூதியின் அரசு மருத்துவமனையில் 6 ஆண்டுகளாக சேவை புரிந்துள்ளார்.

மேலும் கிராமப்பகுதியில் மகப்பேறு மருத்துவப் பணிக்காக அரசின் சார்பாக 'அன்னை தெரசா', 'ராஜீவ் காந்தி' ஆகிய பெயர்களில் உயரிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.

7 comments:

  1. நல்ல கேள்விகள்; தெளிவான பதில்கள்!

    ReplyDelete
  2. ஆஹா..! அருமை...! அருமை...!! அதிரை நியூஸ் இப்படிப்பட்ட மருத்துவ பேட்டி கண்டமைக்கு நான் மனதார வாழ்த்துகிறேன்.. அதிரை ஷிஃபா மருத்துவமனை நல்ல நோக்கத்தோடு தர்ம சிந்தனையோடு அனைத்து மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப் பட்ட இந்த ஷிஃபா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் செல்லராணி MBBS., DGO., அவர்கள் திறமையாக பேட்டி அளித்ததையும் அவர்கள் எங்களை போல் உள்ளவர்களை விழிப்புணர்வு செய்தமைக்கும் தம்பி சாகுல் அவர்கள் திறமையான பேட்டி கண்டு அதிரை நியூஸ் க்கு புகழை தேடி தந்தமைக்கும் அதிரை நியூஸ் நிர்வாக இயக்குனர் ஜனாப்.சேகன்னா நிஜாம் அவர்களையும் வாழ்த்துகிறேன்.... வாழ்க அதிரை நியூஸ். வளர்க ஷிஃபா மருத்துவமனை.....

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    ஆஹா..! அருமை...! அருமை...!! அதிரை நியூஸ் இப்படிப்பட்ட மருத்துவ பேட்டி கண்டமைக்கு நான் மனதார வாழ்த்துகிறேன்.. அதிரை ஷிஃபா மருத்துவமனை நல்ல நோக்கத்தோடு தர்ம சிந்தனையோடு அனைத்து மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப் பட்ட இந்த ஷிஃபா மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் செல்லராணி MBBS., DGO., அவர்கள் திறமையாக பேட்டி அளித்ததையும் அவர்கள் எங்களை போல் உள்ளவர்களை விழிப்புணர்வு செய்தமைக்கும் தம்பி சாகுல் அவர்கள் திறமையான பேட்டி கண்டு அதிரை நியூஸ் க்கு புகழை தேடி தந்தமைக்கும் அதிரை நியூஸ் நிர்வாக இயக்குனர் ஜனாப்.சேகன்னா நிஜாம் அவர்களையும் வாழ்த்துகிறேன்.... வாழ்க அதிரை நியூஸ். வளர்க ஷிஃபா மருத்துவமனை.....

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அதிரை தாய்மார்கள் அறுபது கிலோ மீட்டர் தொலைதூரம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவதை வீட அருகிலேயே அதாவது நமக்கு எட்டிப்பார்க்கும் தூரத்தில் இருக்கும் இந்த மருத்துவரின் சேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. என் அன்பு வேண்டுகோள்... என் அருமையான பொது மக்களே, நாம் நம் ஊரில் உள்ள ஷிஃபா மருத்துவமனயை பாதுகாத்து பயன் பெற்று கொள்ள இதை விட நமக்கு என்ன தேவை. இன் ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஷிஃபா மருத்துவமனை புகழ் நாம் இல்லவிட்டாலம்,நம் ஊர் சரித்திரம் சொல்லும்.... டாக்டர் அவர்களின் பேட்டி அருமை.! நன்றி..........!
    மணிச்சுடர் நிருபர்
    A.ஷாகுல் ஹமீது
    அதிரை.

    ReplyDelete
  6. ஷிஃபா மருத்துவமனை மகப்பேறு டாக்டரை அணுகி பயனுள்ள தகவல்களை பேட்டி எடுத்து வெளியிட்ட அதிரை நியூஸிற்கு முதலில் நன்றி.

    கர்ப்பிணி பெண்களுக்கு மிக பயனுள்ள தகவல்களை தந்துள்ளார்கள் .அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.