.

Pages

Monday, June 10, 2013

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் மருத்துவ நிதி உதவி !

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளை பிரிவின் சார்பாக மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல், நகரை தூய்மைப்படுத்துதல், அரசு உதவிகளை பெற்றுத்தருதல், வாழ்வாதார உதவி செய்தல் ஆகியவற்றின் வரிசையில் மருத்துவ  உதவியாக மேலத்தெருவைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகள் இல்லாத, வீட்டு வேலை செய்து பிழைத்து வந்த ஏழை சகோதரி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவருக்கு மருத்துவ நிதி உதவியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளை நிர்வாகிகள் இன்று மாலை வழங்கினார்கள்.

மேலும் இந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ நிதி உதவி செய்ய முற்படும் சகோதரர்கள் தாராளமாக இவரைத்தொடர்பு கொண்டு உதவலாம்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ் உங்கள் சேவைக்கு இன்னும் தாரளமாக நிதி சேரட்டும் .எல்லோருக்கும் உதவுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.