அரசு நிறுவனமாகிய இன்டேன் மூலம் அதிரையில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்த சில வாரங்களில் ஊழியர் மூலம் விநியோகிக்கப்படும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் பில் தொகையை வீட கூடுதலாக வசூல் செய்வதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவியது. இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் தெரிவித்து வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தன.
புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே வசூல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுதான் வந்தன. இதைத் தொடர்ந்து நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளில் ஒருவரும் 'சேனா மூனா' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜா முகைதீன் அவர்கள் நமது மாநில முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தனது கோரிக்கையை புகாராக அனுப்பி இருந்தார்.
இதற்கு பலன் சேர்க்கும் வகையில் கூடுதல் வசூல் வேட்டை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலுவலர்கள் ஹாஜா முகைதீன் அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். விரைவில் நல்லதொரு முடிவு எட்டும் என்று எதிர்பார்ப்போம் !
தற்போதைய இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுகின்ற வகையிலும், யார் வேண்டுமானாலும் கோரிக்கையை இலகுவாக எடுத்துச்செல்ல முடியும் என்ற நல்லதொரு வழிகாட்டியை ஏற்படுத்தி கொடுத்த சகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களின் இந்த சமூகப் பணியை பாராட்டி 'அதிரை நியூஸ்' குழுமத்தின் சார்பாக நன்றியையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.
சரி... சரி... நாங்களும் புகார்களை எப்படி பதிவு செய்வது ? என நீங்கள் முணுமுணுப்பது எங்கள் காதில் விழத்தான் செய்கின்றன.... :)
கோரிக்கைகளை பதிவு செய்வது எப்படி ? என்பதை பார்ப்போம்
முதலமைச்சரின் தனிப்பிரிவு என்றால் என்ன ?
ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப ப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.
சரி எவ்வாறு நமது புகார் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்வது ?
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளத்தில் [ http://cmcell.tn.gov.in/ ] புகார் அல்லது கோரிக்கைகளை பதிவு செய்வதற்கு நமக்கு தேவையானது, மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் [ http://cmcell.tn.gov.in/register.php ] சென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்ப்ளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட்டும் உடனே நம்முடைய மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும். அது போக, கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும்.
இந்த முகவரியில் [ http://cmcell.tn.gov.in/login.php ] உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று டிராக் செய்யவும் முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை துரிதமாக அந்தந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகிறது.
கடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு எழுதலாம்...
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
அதிரை நியூஸ் குழு
தற்போதைய இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுகின்ற வகையிலும், யார் வேண்டும் என்றாலும் கோரிக்கையை இலகுவாக எடுத்துச்செல்ல முடியும் என்ற நல்லதொரு முன்மாதிரியை ஏற்படுத்தி கொடுத்த சகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களின் இந்த சமூகப் பணியை பாராட்டு வதோடு மட்டுமல்லாமல் நறியையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.
ReplyDeleteசகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களின் இந்த சமூகப் பணி பாராட்டப்படவேண்டிவவை. இப்படி அனைத்து மக்களும் விழிப்புணர்வோடு இருந்தால் இலஞ்சம், ஊழல்,மோசடி எல்லாம் காணாமல் போய்விடும்.
ReplyDeleteசகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களின் இந்த சமூகப் பணி பாராட்டப்படவேண்டிவவை. இப்படி அனைத்து மக்களும் விழிப்புணர்வோடு இருந்தால் இலஞ்சம், ஊழல்,மோசடி எல்லாம் காணாமல் போய்விடும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteபுகார்கள் கொடுக்க எல்லோருக்கும் தைரியம் வருவதில்லை, புகார்கள் கொடுக்கணும் என்று மனசு வைத்தாலும், புத்தியில் ஒரு வகை பயம் புகுந்து கொண்டு தைரியத்தை நீக்கி விடுகிறது.
அப்படியே தைரியம் நீங்கினாலும், இருக்கின்ற பெலத்தோடு முன்னேற மனசு விடுவதில்லை.
இப்படியான குழப்பத்தினால் முடியவேண்டிய எத்தனையோ பொதுப் பணிகள் முடியாமல் இருக்கின்றன.
இருந்தாலும் இந்த சகோதரர் எடுத்த இந்த முயற்சி பாராட்ட வேண்டியது.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அருமை அருமை அதிரை இளைஞர்கள் தற்பொழுது விழிதுள்ளதனர் யாராலும் மக்களை ஏமாற்ற முடியாது.
ReplyDeleteபுகார்கள் கொடுக்க எல்லோருக்கும் தைரியம் வருவதில்லை, புகார்கள் கொடுக்கணும் என்று மனசு வைத்தாலும், புத்தியில் ஒரு வகை பயம் புகுந்து கொண்டு தைரியத்தை நீக்கி விடுகிறது.
இருந்தாலும் இந்த சகோதரர் எடுத்த இந்த முயற்சி பாராட்ட வேண்டியது.
ஜசக்கல்லாஹ் ஹைர்
இம்முயற்சியின் பலன் விரைவில் அல்லாஹ் வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்!
கலக்களே சேன மூனா.......கலக்கிட்டிய போங்க.
ReplyDeleteஇம்முயற்சியின் பலன் விரைவில் (இன்ஷா அல்லாஹ்) வெற்றியை தரும்.........வாழ்த்துக்கள்.
ஜசக்கல்லாஹ் ஹைர்
நல்ல விழிப்புணர்வு உள்ள பதிவு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு உள்ள பதிவு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteToll Free Complaint
ReplyDeleteIn order to have a more convenient, easy and effective way to enable the customer to air their complaints and follow up on such complaints, IOC has started the service of using unique toll free numbers for the complaint registration through call centers from 2nd October 2008. Across the country IOC has a unique number 18002333555, easy for the customers to remember .
The call centers are operated region wise to facilitate the customers to lodge complaints in local language. Customers are given a registration number and those wish to know about the status of the complaints can call up the call centers in the same toll free numbers.
The complaint lodging is in a manual mode for 8am to 8 pm and an IVRS mode during 8pm to 8 am.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுகார்கள் கொடுக்க எல்லோருக்கும் தைரியம் வருவதில்லை, புகார்கள் கொடுக்கணும் என்று மனசு வைத்தாலும், புத்தியில் ஒரு வகை பயம் புகுந்து கொண்டு தைரியத்தை நீக்கி விடுகிறது.
ReplyDeleteஇருந்தாலும் இந்த சகோதரர் எடுத்த இந்த முயற்சி பாராட்ட வேண்டியது.
ஆமாங்க இந்த மாதிரி எல்லாரும் லஞ்சம் லஞ்சம்னு வாங்கி வாங்கி தமிழ் நாட்டை குட்டிசுவரா ஆக்கிட்டானுங்க............
ReplyDeleteசகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களின் சமுக ஆர்வத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களின் இந்த சமூகப் பணி பாராட்டப்படவேண்டிவவை.தற்போதைய இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி.வாழ்த்துக்கள்!
ReplyDelete