பள்ளியின் நிர்வாகம் தன் பள்ளி 100% தேர்ச்சி பெற வேண்டும்; முதல் மதிப்பெண் பெறவேண்டும்; மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர்களை வற்புறுத்த, அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை நெருக்க, வீட்டிலும் பள்ளியிலும் மாறி மாறி மாணவர்கள் சாறுபிழியப்படுகிறார்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகளைப் பணம் ஈட்டும் கருவியாக ஆக்காமல் உணர்வுள்ள மனிதப் பிறவியாக எண்ணிச் செயல்பட வேண்டும்.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1) 5 வயதிற்கு முன் பள்ளியில் சேர்ப்பதைக் கட்டாயம் தடுக்க வேண்டும்.
2)அப்படிச் சேர்க்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்கள் வகுப்பறையில் மாணவர்களை அடைத்துப் பாடம் நடத்தாமல், அவர்களை நன்றாக விளையாடி மகிழச் செய்து, அதன்வழி சில சுமையற்ற அடிப்படைக் கல்வியைப் புகட்ட வேண்டும். அதாவது, பிள்ளைகள் ஆர்வத்தோடு அங்கு (பள்ளிக்கு) செல்லும் சூழல் மட்டுமே இருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் முரண்டு பிடித்தால் அவர்களுக்கேற்ற சூழல் அங்கில்லை என்பதே பொருள்.
3) மனப்பாடத்திற்கு மதிப்பெண் அதிகம் தராமல் செயல்முறையில் அறிவை வளர்க்க, அறிவைச் சோதிக்க கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
4) படைப்பாற்றல் வளர்க்கும் கல்வியாகவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கல்வியாகவும் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மாணவனின் எதிர்கால வாழ்வில் (அவன் ஆற்றும் பணிக்கு) அது பயன்பட வேண்டும்.
5) மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, மதச் சார்பற்ற நீதிநெறி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளியின் காலைப் பேரவைக் கூட்டத்தில் 5 நிமிடம் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்க வேண்டும்.
6) நன்னடத்தைக்கும், பொதுத் தொண்டாற்றியமைக்கும், விளையாட்டுப் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் மதிப்பெண் பொதுத் தேர்வில் சேர்க்கப்பட்டு, அம்மதிப்பெண், தொழிற்கல்வியில் சேர்வதற்கு இடம் அளிக்க, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
7) மருத்துவம் பயில இடம் அளிக்கும்போது, மாணவர்களின் தேர்வு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர, அம்மாணவருக்குப் பொதுத் தொண்டில் ஆர்வம் இருக்கிறதா? மனித நேய மனம் இருக்கிறதா? மக்களுக்குச் சேவை செய்யும் விருப்பம் இருக்கிறதா? என்பவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இவை இல்லாத மருத்துவராய் அவர் வந்து என்ன பயன்?
8) பெற்றோர் ஆசிரியர் தொடர்பு:
மாணவர்களின் மன இறுக்கத்திற்கும், மாணவர்கள் தடம் புரண்டு செல்வதற்கும் பெற்றோரே பெருங்காரணம். பள்ளியில் சேர்த்து விட்டதோடு தங்கள் கடமை முடிந்தது எனக் கருதும் பொறுப்பில்லா நிலையாலே இவை நிகழ்கின்றன.
பெற்றோர் வாரம் ஒரு முறையாவது பள்ளிக்குச் சென்று, தங்கள் பிள்ளையினுடைய நிலை குறித்து ஆசிரியரிடம் அறிய வேண்டும். பெற்றோர்கள் வருவார்கள் என்று தெரிந்தாலே மாணவர்களின் செயல்பாடுகள் வரம்பிற்குள் வரும்.
9) சான்றோர் கூட்டம்: மாதம் ஒருமுறை ஒரு சான்றோரை அழைத்து வந்து, மாணவர்களைக் கூட்டி, மதம் சாரா நன்னெறிக் கருத்துகளை மாணவர்களுக்குச் சொல்லச் செய்ய வேண்டும்.
அன்பால் திருத்த வேண்டும்: அடித்து, திட்டி, தண்டித்துத்தான் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் மீது நமக்கு அன்பும், அவர்கள் முன்னேற்றத்தில் நமக்கு அக்கறையும் இருக்கிறது என்று மாணவர்கள் அறிந்தால், அந்த ஆசிரியர் சொற்படி கட்டாயம் நடப்பர்.
தங்கள் அதிகாரத்தை, மேன்மையைக் காட்டும் நோக்கத்துடன் ஆசிரியர்கள் நடந்து கொண்டால், அது மாணவர்களிடையே வெறுப்பை, எதிர்விளைவையே ஏற்படுத்தும்.
காலச்சூழலுக்கேற்றப் பதிவு !
ReplyDeleteமாணவர்களிடேய துண்டு பிரசுரம் மூலம் இவற்றை விநியோகித்தால் நல்ல பலன் கிட்டும்
ஆசிரியர்கள் - பெற்றோர் - மாணக்கர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்
தொடர வாழ்த்துக்கள்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகாலச்சூழலுக்கேற்றப் பதிவு !
மாணவர்களிடேய துண்டு பிரசுரம் மூலம் இவற்றை விநியோகித்தால் நல்ல பலன் கிட்டும்
ஆசிரியர்கள் - பெற்றோர் - மாணக்கர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்
தொடர வாழ்த்துக்கள்...
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
காலசூழலுக்கேற்ப அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டிய கட்டுரை.
ReplyDeleteநியாயமான எதிர்பார்ப்புக்கள் நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.
பதிவில் கொண்டு வந்து அறியத்தந்த அதிரைத்தென்றல் (இர்பான்) அவர்களுக்கு நன்றி.
அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் அதிரைத்தென்றல் (இர்பான்) அவர்களுக்கு.
ReplyDelete