.

Pages

Monday, June 3, 2013

சி.எம்.பி.லைனில் மின் கடத்தல் கண்டுபிடிப்பு [ புகைப்படங்கள் ]




21 வது வார்டு சி.எம்.பி. லைன் பகுதியில், ஹனீப் பள்ளிக்கு மிக அருகாமையில் மின் கம்பிகளும் எருக்கேன் செடிகளும் ஒன்றுக்கொன்று கடுமையாக உரசிக் கொண்டு இருப்பதினால் மின்சாரம் திருட்டுத் தனமாக நிலத்திற்கு அந்தச் செடிகள் மூலமாக கடத்தப்பட்டு வந்தது. அந்த செடியை யாரும் தொட்டாலும் மின்சார அதிர்ச்சி உண்டாகும். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் உடனே உயர்மட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் புகைப்பட ஆதாரத்தோடு தெரிவித்தது மட்டுமல்லாமல் தொலைபேசி மூலமும் உறுதி செய்துவிட்டேன்.

அந்த இடத்தில் கடந்து செல்லும் மின் கம்பிகள் வருவோர் போவோர் தலையில் தட்டும் அளவுக்கு தொய்வாக இருக்குது, இதுவரைக்கும் அப்பகுதியில் பிரவேசிக்கும் யாருடைய கண்களுக்கும் படாமல் இருந்திருக்குது, மேலும் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அது அபாயகரமான பகுதியாக இருக்குது. ஆகவே, அப்பகுதி மக்களை மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்லிவிட்டு அந்த எருக்கேன் செடியை அந்தப்பக்கம் வந்த ஒரு ஆளை வைத்து அடியோடு வெட்டி மண்ணோடு மண்ணாக சாய்த்து விட்டேன். தற்போது மின் கடத்தல் நின்று விட்டது..

அந்த இடத்தில் புதியதாக ஒரு மின் கம்பத்தை நட்டு மின் கம்பிகளை உயர்த்தி கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளது மின் வாரியம். மின் கம்பம் நடும் வரைக்கும் அப்பகுதி அபாயகரமானதுதான்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late).

15 comments:

  1. மின்சார வாரியத்தின் அனுமதி இல்லாமல் மின்சாரத்தை திருடும் பாவப்பட்ட செடி கொடிகள், மரங்கள் மீது கவனத்துடன் இருப்பது மின்சார வாரியத்தின் கடமையாகும்.

    இதனால் நகரின் அவ்வப்போது மின்துண்டிப்பு இல்லாமலாவது இருக்கும்

    ReplyDelete
  2. மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சிறுவிசயமானாலும் அதிக சிரத்தை எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திருப்பது ஜமால் காக்காவின் சமுதாய அக்கறையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    தொடரட்டும் உங்களின் சமூகப்பணி....

    ReplyDelete
  3. ஆக அன்று நானும் ஜமால் காக்காவும் இந்த மின் ஒயர் தொங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

    பேச்சோடு மட்டுமல்லாமல் செயலிலும் தன்னுடைய சமூக நலனை செய்துகாட்டியிள்ளார். காக்கா யூவார் கிரேட்

    வெளிச்சம் போட்டு காட்டிய அ.நியூஸ் கும் ஜமால் காக்காவுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  4. செடிகொடிகளும் கடத்தல் செய்யும் செய்தியை ஜமால் காக்காவின் பதிவிலிருந்து தான் தெரிந்து கொண்டேன். இத்தனையும் கவனித்து சமுதாயப் பணியில் களமிறங்கி நிற்கும் மனித உரிமை ஆர்வலர் அவர்களுக்கு மன நிறைவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அது சரி ஊரில் எங்கும் இல்லாத அளவுக்கு குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் காடுகள் மண்டிகிடப்பதற்கு காரணம் மின்சாரமோ. அப்போ நீர் இல்லையென்றாலும் மின்சாரம் மூலம் செடிகள் வளரும்?
    தயவுசெய்து செய்து பார்த்துடாதியா.

    K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கும்.பதிந்தமைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      மின்சாரத்திற்கு எர்த் தேவைப்பட்டதாம், அதான் அந்த செடி உதவி செய்வதற்காக இப்படி நெடு நெடுவென்று வளர்ந்ததாம்.

      Delete
  6. மின்சாரத்திற்கு எர்த் தேவைப்பட்டதாம், அதான் அந்த செடி உதவி செய்வதற்காக இப்படி நெடு நெடுவென்று வளர்ந்ததாம்.

    என்ன காக்க மின்சார ஊழியர்களின் சேவைகளையும் மிஞ்சும் அளவிற்கு சேவைகள் செய்த செடிகளையும் சாய்ச்சுப்புட்டியல.


    ஏன் காக்க இப்படி செய்திருந்தா என்னை தொடாதே நான் என்னால் முடிந்த சேவைகளை செய்துக்கொன்றிருக்கிறேன் என்று விளம்பர பலகை வைத்திருந்தா.


    மரம் வளர்ப்போம் மரம் வளர்ப்போம் மனித வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் காரணிகளுக்கு இடையூறுகள் இல்லா வண்ணம் மரம் வளர்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அந்த செடியோடு ஆடு, மாடு, அட நம்ம மனிதர்கள் உரசினார்கள்?

      அப்புறம் எங்கு போவார்கள்?

      அதான் ஒரேயடியா அதை அனுப்பிட்டேன்.

      Delete
  7. எர்த்குள்ள போவாங்கனு நினைக்கிறேன். சரியான சேவைகள் செய்தமைக்காக வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  8. நானும் தலைப்பை பார்த்து விட்டு என்னா மின்சாரம் திருட்டா என்று பயந்து விட்டேன் அதற்குபிறகுதான் தெரியிது எருக்கேன் செடி என்று நல்லதா போச்சி போங்க ஜமால் காக்கா இப்படியல்லாம் தலைப்பு வைத்து பீதிய கிளப்பாதிக்க ஹி ஹி ஹி .இருத்தாலும் சமுக பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.