.

Pages

Saturday, June 1, 2013

ரூபாய் 6,10,000/- த்துக்கு ஏலம் போன தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் !

அதிரை தக்வாப் பள்ளிக்கு சொந்தமான கடைத்தெரு மீன் மார்க்கெட் தொடர்புடையவைகளுக்கு பகிரங்க ஏலத்திற்கான அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு  தினசரி நாளிதழிலும், பள்ளிவாசல்களிலும் தக்வாப் பள்ளியின் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.




இதைத்தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் தக்வாப் பள்ளியின் வளாகத்தில் பகிரங்க ஏலம் விடப்பட்டது. இதில் அதிரையைச் சார்ந்த 12 நபர்கள் ரூபாய் 5000/- த்தை டெபாசிட் தொகையாக செலுத்தி ஏலம் கோரினார். இறுதியாக அதிக தொகையில் அதாவது 6,10,000/- த்துக்கு ஏலம் கோரிய ஆதம் நகரைச் சார்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஒப்பந்ததை உறுதி செய்தனர் தக்வாப் பள்ளியின் நிர்வாகத்தினர்.
இன்று நடந்த பகிரங்க ஏல நிகழ்வில் பெரும் திரளான வியாபாரிகள் பங்கு பெற்றனர். அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

3 comments:


  1. ஏலம் எடுத்தவர்களுக்கு அவர்கள் வியாபரத்தில் பரகத் கிடைக்கட்டுமாக!
    தக்வா பள்ளி நிர்வாகத்தின் நல்ல நிய்யத் நிறைவேறட்டுமாக! ஆமீன்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி.

    நல்ல படியாக முடிந்த ஏலம் எல்லாவற்றுக்கும் நன்மையாக இருக்கட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.