.

Pages

Friday, June 7, 2013

டீசலுக்கு மாற்றாக தவிடு எண்ணெய் : வாகனங்களுக்கான புதிய எரிபொருள் !

டீசலுக்கு பதிலாக வாகனங்களுக்கான புதிய எரிபொருளை நாகை மாவட்டம், திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தரங்கம்பாடி, ஹைடெக் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோருடன், திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வரும் வெற்றிவேல், விக்னேஷ், மகேஷ்ராஜா, பிரவீன்குமார் ஆகிய 4 மாணவர்கள் இணைந்து வாகனங்களுக்கான இந்த புதிய எரிபொருளை கண்டறிந்துள்ளனர்.
தவிடு எண்ணெய்யில் எரிபொருள் மாணவர்கள் கூறுகையில், இந்த புதிய எரிபொருளில் 80 சதவீதம் சுத்திகரிக்கப்படாத தவிடு எண்ணெய் மற்றும் 20 சதவீதம் டீசல் என்ற அளவில் கலக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளை பயன்படுத்தும்போது, ஒரு லிட்டரில் 45 கிமீ தூரம் செல்ல முடியும்.

85 சதவீதம் தூய்மையான இந்த எரிபொருளை தயாரிக்க குறைவான செலவு பிடிக்கிறது. எனவே, ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்க முடியும். டீசலைவிட 85 சதவீதம் குறைவாக புகை வெளியாகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

இந்த எரிபொருள் எஞ்சின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்தவொரு டீசல் எஞ்சினிலும் இந்த எரிபொருளை பயன்படுத்தலாம். இதற்கென எஞ்சினில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை, என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பை வணிக ரீதியில் சாத்தியமாக்கவும், ஊக்குவிக்கவும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல் பயிரிடப்படுவதால், தவிடு மலிவாக கிடைக்கும். எனவே, எரிபொருள் உற்பத்தி தங்கு தடையின்றி செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு அரசு உதவி கிடைத்தால் பொருளாதார ரீதியிலும் நம் நாடும் முன்னேறும்  விவசாய தொழிலாளிகள் வாழ்க்கையும் முன்னேறும்.

பரிந்துரை : மான் A. ஷேக் [ கனடா ] 
நன்றி: சரவணா

3 comments:

  1. நல்ல முயற்சி !

    வெற்றியாக அமைந்திட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. நல்ல முயற்சி இதனை கண்டுபிடித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.