.

Pages

Monday, June 17, 2013

அதிரையரை சுண்டி இழுக்கும் ஆலப்புழை படகு சவாரி !


கேரளா என்றதும் நம் நினைவுக்கு வருவது தென்னை மரங்களும் பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பும் தான்.  இந்தப் பசுமையான நிலப்பரப்பில் படகு சவாரிக்கென்றே கொச்சின் [ எர்ணாகுளம் ] முதல் கொல்லம் வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தை நீர்ப்பரப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 24 மணிநேரமும் சவாரி செய்ய படுக்கையறை வசதியுடன் கூடிய படகுகள் ஏராளமாக அங்கு உள்ளது. 

படகு சவாரிக்கென்றே டூர் ஆப்பரேட்டர்கள் நிறைய பேர் இருந்தாலும் நம் இருப்பிடத்திலிருந்தவாறு தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்துவிட்டு அங்கே செல்லலாம்.  வாடகை கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 10,000/- வசூல் செய்யப்படுகிறது. நமது பெயர் மற்றும் இருப்பிட முகவரியுடன் புகைப்படச் சான்றையும் அவர்களிடம் வழங்க வேண்டும்.

படகில் பெரிய லாபி. ஓட்டுநர் அமர்ந்து படகை ஓட்டுவதற்கு ஒரு இடம், அதன் பின்னால் பெரிய சோபா செட்டுகள், டைனிங் டேபிள், டிவி, வீடியோ பிளேயர், லைப் ஜாக்கெட், படுக்கை அறைகள், குளியலறை கழிப்பறை வசதி, சமையல் அறை ஆகியவற்றோடு மாடியில் சென்று  நீர்ப்பரப்பை பார்ப்பதற்குரிய வசதி என அனைத்தும் செய்யப்பட்டிருக்கும்.  சுமார் 200 மீட்டர் அகலம் கொண்ட நீர்ப்பாதை ஒரு மிகப்பெரிய ஆறுபோல் காணப்படும் அழகே தனிச்சிறப்பு.  

நாம் படகில் ஏறியதும் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் நம்மை வரவேற்பார், குடிப்பதற்கு வெல்கம் டிரிங் என்று சொல்லி இளநீர் கொடுக்கப்படும், படகு சவாரி பற்றி விளக்கமாக ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றிய பின் படகில் நம்முடன் பயணிக்கப்போகும் மூன்று பேர் அதாவது ஒரு ஓட்டுநர், ஒரு சமையல்காரர் மற்றும் இஞ்சினியர் ஆகியோரை அறிமுகம் செய்துவைக்கப்படும்.  

உணவுகள் படகில் வழங்கப்பட்டாலும் நாம் விரும்புகின்ற பொருளை வாங்கிக்கொடுத்தால் சமைத்துக்கொடுப்பார்கள். வெளியில் விற்பனை செய்யும் பொருட்கள் சற்றுக் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்குவதற்கு சற்று தயங்குகின்றனர்.

அமைதியான சூழலில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே படகில் செல்வது வித்தியாசமான அனுபவம் மட்டுமல்ல சுகமான இனிமையான பயணமாக அமையும் செல்வந்தர்களுக்கு மட்டும் :)















4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அருமை அருமை நம்மவர்கள் சென்றதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற புகைப்படத்தை காட்டி கண்ணுக்கும் விருந்தளிகின்றனர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கேரளாவின் எழில் மிகு இயற்க்கை காட்சியையும் உல்லாசப்படகையும் புகைப்படத்தில் காட்டி கண்களுக்கு குளிர்ச்சியை புகுத்தி விட்டீர்கள். சூப்பர்.

    ReplyDelete
  4. இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவின் படகு சவாரி ஒரு தனி ரகம் தான்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.