.

Pages

Tuesday, June 25, 2013

அதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பணி ஏற்பு விழாவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது !

இன்று [ 25-06-2013 ] மாலை 6.30 மணியளவில் அதிரை லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா லாவண்யா திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
லயன்ஸ் சங்கத்தலைவர் S.A. அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் S. வேதநாயகம் அவர்களால் புதிய நிர்வாகிகளுக்கான பொறுப்புகள் அறிவிப்பு செய்யப்பட்டன.

2013-2014 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் :
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முனைவர் மேஜர் S.P. கணபதி மற்றும் M. நெய்னா முஹம்மது ஆகியோரால் வாழ்த்துரை வழங்கப்பட்டது.




இதனைத்தொடர்ந்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு எழுதி அதிரையளவில் சாதனை படைத்த 36 மாணவ மாணவிகளுக்கு 'இளம் சாதனையாளர்' விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J. அபுல் கலாம் அவர்கள் எழுதிய ' அக்னி சிறகுகள்' என்ற நூலும் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் அனைத்தும் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியின் இறுதியாக செயலராக பொறுப்பேற்றுக்கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டன.




நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் லயன்ஸ் சங்கத்தலைவர் S.A. அப்துல் ஹமீது, செயலர் M. சாகுல் ஹமீது, பொருளாளர் K. தமீம் அன்சாரி ஆகியோருடன் லியோ சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி, அதிரை லியோ சங்கம் மற்றும் லயன்ஸ் அங்கத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்துவதிலும் நமது சமுதாயம் மேம்பட வாய்ப்பாக அமையும்.

    லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சிறப்புடன் பணியாற்ற என் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி:
    மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்துவதிலும் நமது சமுதாயம் மேம்பட வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete
  4. தகவலுக்கும் நன்றி.சந்தோஷமான செய்தி.
    லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சிறப்புடன் பணியாற்ற என் வாழ்த்துக்கள்.........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.