.

Pages

Monday, June 24, 2013

அதிரை ஷிஃபா மருத்துவமனையின் இன்றைய நிலை [ காணொளி ] !

சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிரையும் ஒன்று. ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இவ்வூரைச்சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சேன்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமங்களை பெற்றிருந்தும் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையொன்று நமதூரில் இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தன. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுவதை கருத்தில் கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரந்த பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிரையின் மிகப்பெரிய மருத்துவமனையாக ஷிஃபா உருவாகியது.

சரி விசயத்திற்கு வருவோம்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'அதிரை நியூஸ்ஸின்' நேர்காணலுக்காக நமதூரில் இயங்கி வருகின்ற ஷிஃபா மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு சிறப்பு மருத்துவராக  பணிபுரிந்து வருகின்ற டாக்டர் செல்லாராணி MBBS., DGO., அவர்களை சந்திக்க நேரிட்டது.

எமது சந்திப்பு முடிந்ததும் எங்களின் பார்வை முழுவதும் மருத்துவமனையை சுற்றி வந்தன. குறிப்பாக அங்கே காணப்படும் சுகாதாரம், பசுமையுடன் காணப்படும் அமைதிச்சூழல், தாராள இட வசதி, தேவையான மருத்துவ உபகரணங்கள், 24 மணி நேர மருத்துவர்கள் மற்றும் மருந்தகம், செவிலியர் சேவை, அறுவை சிகிச்சைக்கூடம், பரிசோதனைக்கூடம் ஆகிய வசதிகளோடு நோயாளிகள் தங்குவதற்கு தனி மற்றும் பொதுவான அறைகள் உள்ளிட்டவை மிகப்பெரிய நிலப்பரப்பில் குறிப்பாக தஞ்சை அளவில் எந்தவொரு மருத்துவமனையும் பெற்றிராத சிறப்பை நமது மருத்துவமனை பெற்றுள்ளன என்பதை நாம் அறிய முடிந்தது.

மருத்துவமனை பராமரிப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகைக்கு ஏற்ப நோயாளிகளின் வருகை போதுமானதாக இல்லை என்பதை அங்கே நாம் காணமுடிந்தது. அதிரை மக்கள் நாள் ஒன்றுக்கு மருத்துவத்திற்காக செலவீடப்படும் தொகை ரூபாய் 3 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை இருப்பாதாக கணக்கிடப்படுகிறது. இந்த தொகை முழுவதும் வெளியூர்களில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் அதனைச் சார்ந்த டாக்டர்களுக்கு சென்று விடுகின்றன.

அதே போல் குழந்தை மருத்துவத்திற்காகவும், பிரசவத்திற்காகவும் தங்களின் நேரத்தையும், வலியையும் பொருட்படுத்தாது 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் தாய்மார்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன என்பதை மறந்து விடுகின்றனர்.

மருத்துவமனைக்கு புதிதாக வருகின்ற டாக்டர்களும் நிரந்தரமாக தங்கி பணிபுரியாமல் வந்த சில மாத காலங்களிலேயே மருத்துவமனையை விட்டுச்சென்று விடுவதும், கூடவே வாடிக்கையான நோயாளிகளையும் அழைத்துக்கொண்டு போவதால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுவது நமது மருத்துவமனைக்குத்தான் என்பதை நம்மால் யூகிக்க முடிந்தன.

இதுகுறித்து ஷிஃபா மருத்துவமனையின் நிர்வாகச் செயலர் S.M.ஷிப்ஹத்துல்லாஹ் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து ஷிஃபா மருத்துவமனை மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்தைப்பெற்றோம்.

தரம் - சேவை உயர உறுதுணையாய் இருப்போம் :
அதிரையில் தற்போது இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர்கள் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளது. மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை அவசர சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்ற சிரமங்களையெல்லாம் கருத்தில் கொண்டே நமதூரைச்சார்ந்த கொடை வள்ளல்கள், சமூக ஆர்வலர்கள் பலர் நமக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு ஏற்படுத்தி தந்துள்ளனர். 

நமது மருத்துவமனையை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்த்த நல்ல ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்கி மருத்துவமனை மேம்பட உறுதுணையாக இருப்போம் [ இன்ஷா அல்லாஹ் ! ]

அதிரை நியூஸ் குழு




















7 comments:

  1. நேர்த்தியான விளக்கம் நிர்வாகத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அல்லாஹ் உதவி செய்வானாக.

    ReplyDelete
  2. அதிரை நியூஸின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியவை.

    நமதூர் ஷிஃபா மருத்துவமனையில் இத்தனை வசதிகள் இருந்தும் மருத்துவத்திற்கு வெளியூர் செல்லும் காரணத்தைக்கண்டு அறிந்து அதை பூர்த்தி செய்வதுடன் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அடிக்கடி விளம்பரமும் செய்தால் கொஞ்சம் மாற்றம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  3. advertising is best way to develop our shifa hospital better to change secretary .. vote and appoint the good management experience peoples....

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    என் மனதில் பட்டதை இங்கு சொல்ல விரும்புகின்றேன், இது யாரையும் குறை கூறியோ குற்றம் சுமத்தியோ சொல்லவது அல்ல, என் மீது வருத்தங்கள் பட வேண்டாம்.

    இடது நமதூருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம், இதை பயன்படுத்திக் கொள்ள நமதூர் மக்களுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்தும் இஷ்டம் இல்லையா?

    1988ல் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்றோடு சரியாக 24வருடங்கள் 11மாதங்களை கடந்தும் இன்றுவரை போதுமான நோயாளிகளை பெறமால் இருப்பதற்கு என்ன காரணம்?

    விளம்பரங்கள் தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது, எல்லா வசதிகளும் ஒருங்கே பெற்றிருக்கின்றது, இதுமாதிரி சுகாதார அமைப்பை வேறு எங்கும் காண முடியாது, எந்த சப்தங்களும் இல்லாத அமைதியான இடம், இருந்தும் ஏன் இந்த நிலை?

    அங்கு ஏதாவது சில சில குறைகள் இருக்கலாம், குறைகளை எப்படி கண்டறிவது? பொதுமக்கள் மத்தியில் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தி கருத்துக்களைப் பெற்று ஆலோசிக்கலாம்.

    பலவகைகளில் கஷ்டப்பட்டு சம்பாரித்த நமதூர் செல்வங்கள் அநியாயமாக வெளியூர்களில் போய் கொட்டப்படுவதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

    வெளி நாடுகளில் / வெளியூர்களில் இருக்கும் ஆண்கள் தங்கள் குடும்பங்களை ஷிஃபா மருத்துவமனையை பயன்படுத்திக்கொள்ள வற்புறுத்த வேண்டும்.

    ஆக மொத்தத்தில் ஊர் ஒத்துழைப்பும் வேண்டும்.

    எனவே, காலம் கடந்து விட்டது, இனியும் காலம் தாழ்த்தாது துரித நடவடிக்கை எடுத்தால் நல்லது.

    நல்லதே அமைய நானும் விரும்புகின்றேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    ஜமால் காக்கா சொனதேயே நானும் சொல்ல நினைகிறேன், இது யாரையும் குறை கூறியோ குற்றம் சுமத்தியோ சொல்லவது அல்ல, அப்படி சொல்ல எனக்கு விருப்பமுமில்லை, ஆனால் சொல்ல வேண்டியதை சொலியாக வேண்டும், என் மீது வருத்தபட வேண்டாம்.

    நமது மருத்துவமனை இந்த நிலைக்கு காரணம் அதன் நிர்வாகத்தில் ஏற்ப்பட்ட சில குறைபாடுகளும் ஒரு காரணம் மென்பது தான் என் கருத்து.இது நமதூருக்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம் மென்றுதான் சொல்ல வேண்டும், இதை கட்டுவதற்காக சவூது போன்ற எத்தனையோ வெளிநாடுகளில் பொது வசூல் செய்யப்படது என்று நான் நினைகிறேன். எனக்கு தெரிந்து சவூதியில் நடைபெற்றது எத்தனையோ கஷ்டப்பட்டு சம்பாரித் நல் உள்ள கொண்ட நமதூர் சகோதரர்கள் வாரி வழங்கினார்கள் அப்படியெல்லாம் கஷ்டப்படு உறுவாகிய நமது மருத்துவமனை இன்று இப்படியிருகிறதென்பதை நினைக்கும் போது மனதுக்கு மிக வேதனையாகயுள்ளது, எனவே, காலம் கடந்து விட்டது, இனியும் காலம் தாழ்த்தாது துரித நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று நான் கருதுகிறேன், வெளிநாடுகளில் வாழும் எங்களிடம் என்ன வேண்டுமென்று கூறினால் அதை நாங்கள் செய்ய ஆவலுடன் இருகிறோம்மென்பதையும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை போன்ற எத்தனையோ நண்பர்கள் தயாரக இருப்பார்கள் அவர்களை நான் தேடி கண்டு கொள்கிறேன். ஷிஃபா மருத்துவமனையின் வளர்ச்சிக்காக உதவ தயார்.

    தொடர்புக்கு
    N.முகமது மாலிக் அபுதாபி போன் நம்பர் 0097150 7914780 என்ற என்னுக்கு தொடர்பு கொல்லவும் அல்லது என் ஈமெயில் kmmalik2009@gmail.com
    அன்புடன்
    அதிரை M.அல்மாஸ்

    ReplyDelete
  6. மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டம் நல்ல முயற்சி

    ReplyDelete
  7. இந்த கருத்து நான் யாரையும் குற்றம் சாட்ட வில்லை.கடந்த 2008ம் ஆண்டு பட்டுக்கோட்டை லாரம் மேல்நிலைப்பள்ளி அருகே இரு சக்கர வாகனவிபத்து எதிர்பாராவிதமாக இரவு 9 மணிக்கு ஏற்பட்டது.அதில் நானும் எனது நண்பர் மாலிக்கிற்கும் சரியான காயங்கள்,பட்டுக்கோட்டையில் வேலை முடித்து வரும் நண்பர்கள் உதவியுடன் அதிரை ஷிபா மருத்துவமனைக்கு சென்றோம். டாக்டர் இல்லை,ஹாஜா முஹைதீன் நான் வரமுடியாது என்று கூறிவிட்டார்.

    ஷிபா மருத்துவமனை நர்ஸ்மார்கள் முதலுதவி மட்டும் அதே இரவே பட்டுக்கோட்டை கூத்தபெருமாள் டாக்டரிடம் சென்று மருத்துவ சோதனை நடத்தினோம்.

    எதற்கு இது சொல்கிறேன் என்றால் ஊரில் மிகப்பெரிய மருத்துவமனை என்ற பெருமை இருந்தும் டாக்டர்கள் இல்லை என்பதே குறை!!!

    ஷிபா நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

    அரசு மருத்துவமனையில் 24 மணி நேர டாக்டர் இல்லை என்று குறை சொல்லும் நாம் தனியார் மருத்துவமனையும் இப்படிதான் இருக்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.