தலைவர்,
மனுக்கள் குழு,
தமிழ்நாடு சட்டப்பேரவை,
சென்னை - 9
என்ற முகவரிக்கு ஜூலை 12-க்குள் அனுப்ப வேண்டும்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமலிருக்கும் பொதுப்பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும், மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஆனால், மனுவிலுள்ள பொருள்கள் தனிநபர் குறை, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு மற்றும் பட்டா வேண்டுதல், முதியோர் ஓய்வூதியம் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழில்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற பொருள் கொண்டவையாக இருக்கக்கூடாது.
சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை இந்த மாவட்டத்துக்கு மனுக்கள் குழு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். அப்போது குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மனுதாரருக்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் தனியாக பின்னர் அனுப்பி வைக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் அவர்களின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.
இந்த நல்லதொரு வாய்ப்பை அதிரையர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தீர்வுகாண முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.