.

Pages

Tuesday, October 1, 2013

அதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள் !

வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நாசப்படுத்தி விடுகின்றன.அதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அதிரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காட்டில் நரி, காட்டுப்பன்றி, முயல், காட்டு பூனை போன்ற வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி முடுக்குக்காடு, கரிசைக் காடு, வள்ளிக்கொல்லைக் காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நிலங்கள் உள்ளன. சென்ற வருடம் சாகுபடி செய்து அறுவடை செய்யும் நேரத்தில் காட்டு பன்றிகள் வயல்களில் புகுந்து நெற்பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இரவு நேரத்தில் காட்டு பன்றிகள் வயல்களில் புகாமல் அப்பகுதி விவசாயிகள் தீப்பந்தம் மற்றும் பல்புகளை போட்டு வெளிச்சம் காட்டினார் கள்.

வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வருடம் அனைத்து வயல்களிலும் சம்பா சாகுபடி செய்வதற்காக ஆயத்த பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. நாற்று விடுவதற்கு நாற்றங்காலில் தண்ணீர் பாய்ச்சும் வேலைகள் நடந்து வருகிறது. சில வயல்களில் விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

வனப்பகுதியிலிருந்து வரும் காட்டு பன்றிகள் நாற்றாங்கால் வயல்களில் கிழங்கு தின்பதற்காக வயல்களை பள்ளம் பள்ளமாக தோண்டிவிடுகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நாற்று விடுவதற்கு முன் காட்டு பன்றிகள் வயல்களில் உலா வருகின்றன. விவசாயம் செய்வதற்கு முன் காட்டுப்பன்றிகள் வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
காட்டு பன்றிகள் விவசாய நிலங்களுக்களுக்கு வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முடுக்குக்காடு விவசாயிகள் சங்க தலைவர் நாகரெத்தினம் கூறுகையில், சம்பா சாகுபடி செய்வதற்கு அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. சில வயல்களில் விதைகளும் விதைக்கப்பட்டுள்ளன. நாற்று விடுவதற்கு வயல்களில் தண்ணீர் பாய்ச்சி உழுது சேர் அடித்து வரும்போது இரவு 10 மணிக்கு மேல் 2.5 அடி உயரம் 4 அடி நீளம் கொண்ட காட்டு பன்றிகள் கூட்டமாக வந்து தண்ணீர் பாய்ச்சப்பட்ட வயல்களில் பள்ளம்தோண்டி வயல்களில் உள்ள மஞ்சள் கிழங்கை திண்றுவிடுகிறது. எனவே சாகுபடி வயல் பகுதிக்கு காட்டு பன்றிகள் புகாமல் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார

Thanks : Selvakumar - Reporter


6 comments:

  1. பாவம் விவசாயிகள் இதற்கான நடவடிக்கையை சீக்கிரம் எடுத்தால் நல்லது அரசாங்கம்.

    ReplyDelete
  2. //அதிரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காட்டில் நரி, காட்டுப்பன்றி, முயல், காட்டு பூனை போன்ற வனவிலங்குகள் உள்ளன.//

    நம்ம ஊரிலே இவ்வளவு விலங்குள் உள்ளனவா? காணாமல் போன பசுமாடு, நாட்டுக்கோழி இவற்றையும் சேர்த்து நம்ம ஊர்ல ஒரு குட்டி விலங்கியல் பூங்கா (Zoo) அமைத்தால் அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து நாய்க்கு காயடிக்க பயன்படுத்தலாம்ல. பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    #மொக்க_யோசனை

    ReplyDelete
  3. சாகுல் பாய் நல்லா எழுதுறீங்க, தமிழ்ல தட்டச்சு செய்ங்க. தங்கலீஷ்ல எழுதியே கொல்றீங்க.

    ReplyDelete
  4. சாகுபடி வயல் பகுதிக்கு காட்டு பன்றிகள் புகாமல் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  5. urula vevasaya nilam iruka? solava ilaa....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.